சுடச்சுட

  

  ரஜினியின் பேட்டை பட வசூலை முந்துகிறதா அஜித்தின் விஸ்வாசம்?

  By எழில்  |   Published on : 12th January 2019 12:51 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Viswasam-7

   

  கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள பேட்ட படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா, சசிகுமார், நவாசுதீன் சித்திக் போன்றோரும் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். இசை - அனிருத்.

  அஜித் - சிவா ஆகிய இருவரும் மீண்டும் இணைந்துள்ள படம் - விஸ்வாசம். கதாநாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் ஜகபதி பாபு, விவேக், யோகி பாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா, கோவை சரளா போன்றோரும் நடித்துள்ளார்கள். இப்படத்துக்கு இசை - இமான், ஒளிப்பதிவு - வெற்றி. இவ்விரு படங்களும் கடந்த 10-ம் தேதி வெளியாகின.

  இந்நிலையில் முதல் நாளன்று பேட்ட படத்தின் வசூலை விஸ்வாசம் முந்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் முதல் நாளன்று விஸ்வாசம் படத்துக்கு ரூ. 14 கோடியும் பேட்ட படத்துக்கு ரூ. 11.50 கோடியும் கிடைத்துள்ளதாக அறியப்படுகிறது. 

  எனினும் சென்னையில் பேட்ட படத்தின் வசூலை விஸ்வாசம் படத்தால் தாண்டமுடியாமல் போயுள்ளது. முதல் நாளன்று பேட்ட படம் ரூ. 1.10 கோடியும் விஸ்வாசம் படம் ரூ. 88 லட்சமும் வசூலித்துள்ளதாகத் தெரிகிறது. முதல் இரு நாள்களில் சென்னையில் பேட்ட படத்துக்கு ரூ. 2.20 கோடியும் விஸ்வாசம் படத்துக்கு ரூ. 1.75 கோடியும் கிடைத்துள்ளன. அதேபோல வெளிநாடுகளிலும் விஸ்வாசம் படத்தை விடவும் பேட்ட படம் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. 

  தமிழ்நாட்டு அளவில் பேட்ட படத்தை விடவும் அதிக திரையரங்களில் வெளியாகியுள்ளது விஸ்வாசம். இதனால் இதன் வசூல் அதிகமாக உள்ளது. பேட்ட படம் நகரங்களிலும் விஸ்வாசம் படம் பி,சி மையங்களிலும் வெற்றிகரமாக, அதிக வசூலை ஈட்டி வருவதால் இரு தரப்பும் வசூல் நிலவரங்களில் திருப்தியுடன் இருப்பதாகக் கூறப்படுகிறது. 

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai