Enable Javscript for better performance
வரும் 26-ஆம் தேதி முதல் தனுஷின் 'அசுரன்' படப்பிடிப்பு துவக்கம்- Dinamani

சுடச்சுட

    

    வரும் 26-ஆம் தேதி முதல் தனுஷின் 'அசுரன்' படப்பிடிப்பு துவக்கம் 

    By DIN  |   Published on : 22nd January 2019 05:43 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    asuran

     

    சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 'அசுரன்' படத்தின் படப்பிடிப்பு வரும் 26-ஆம் தேதி முதல் துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 

    மாரி 2 படத்தையடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் 'அசுரன்' என்கிற படத்தில் நடிக்கவுள்ளதாக தனுஷ் கடந்த மாதம் அறிவித்தார். உடனடியாக அப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் டிசம்பர் 22-ஆம் தேதி வெளியிடப்பட்டது.  

    கலைப்புலி தாணு இப்படத்தை தயாரிக்கிறார். இந்தப் படத்துக்கு ஜீ.வி.பிரகாஷ் இசையமைப்பது உறுதியாகி விட்டது.

    இந்நிலையில் 'அசுரன்' படத்தின் படப்பிடிப்பு வரும் 26-ஆம் தேதி முதல் துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது  

    ஜனவரி மாதம் படப்பிடிப்பு தொடங்கும் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், இம்மாதம் 26-ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கும் என தனது ட்விட்டர் பக்கத்தில் தனுஷ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai