சுடச்சுட

  
  Raatchasi_5

   

  ஜோதிகா நடித்த ராட்சசி உள்ளிட்ட நான்கு தமிழ்ப் படங்கள் இந்த வாரம் வெளிவரவுள்ளன.

  ஜூலை 4 அன்று ஸ்பைடமேன் ஃபார் ஃப்ரம் ஹோம் (Spider Man Far From Home) படம் ஆங்கிலம் மற்றும் தமிழில் வெளியாகவுள்ளது. ஜூலை 5 அன்று ராட்சசி, களவானி 2, காதல் முன்னேற்ற கழகம் ஆகிய படங்களும் வெளிவரவுள்ளன. ஜீவா நடித்த கொரில்லா படம் ஜூலை 5 அன்று வெளிவரவிருந்தது. ஆனால் இப்போது தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

  ஓவியா, விமல் நடிப்பில் சற்குணம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் - களவாணி 2. இது சிலவருடங்களுக்கு முன்பு வெளியான களவாணி படத்தின் இரண்டாம் பாகம். நடிகர் விமலின் 25-வது படம். களவாணி 2 படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உயர்நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இதனால் இந்த வாரம் வெளியாகிறது.

  டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் கெளதம் ராஜ் இயக்கியுள்ள படம் - ராட்சசி. இசை - ஷான் ரோல்டன்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai