சுடச்சுட

  

  கேலி, கிண்டல்களால் நீச்சல் குளப் புகைப்படத்தை நீக்கிய செளந்தர்யா ரஜினிகாந்த்

  By சினேகா  |   Published on : 02nd July 2019 09:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  soundarya

   

  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் தன் மகன் வேத்-உடன் நீச்சல் குளத்தில் விளையாடிய போது எடுக்கப்பட்ட போட்டோவை தனது டிவிட்டரில் அண்மையில் பதிவிட்டிருந்தார். அதில் அவர் 'குழந்தைகளுக்கு இளம் வயதிலேயே நீச்சல் கற்றுக் கொடுங்கள் ...அதன்பின் தாங்களாகவே அதில் தேர்ச்சி பெற்றுவிடுவார்கள். நீச்சல் கற்பது அத்யாவசியமான ஒரு செயல். #TeachThemYoung #KeepThemActive #WaterFun #EnsureSafetyAlways #NeverLeaveThemAlone #Motherhood #Bliss என்று சில ஹேஷ்டேக்ஸ் உருவாக்கி தனது மகிழ்ச்சியான தருணங்களை வார்த்தைகளாய் பதிவிட்டிருந்தார்.

  இந்தப் புகைப்படங்களைப் பார்த்த சிலர் சென்னையே தண்ணீர் கஷ்டத்தில் மூழ்கியிருக்கும் போது மகனுடன் நீச்சல் குளத்தில் உற்சாகமாக விளையாட உங்களுக்கு எப்படி மனம் வந்தது? என்று கேள்வி எழுப்பினர். இதைத் தொடர்ந்து அப்பதிவை நீக்கிய செளந்தர்யா, ‘சென்னைவாசிகள் எதிர்கொள்ளும் தற்போதைய தண்ணீர் பிரச்னையை கருத்தில் கொண்டு எனது சொந்த பதிவுக்காக பகிரப்பட்ட படங்களை அகற்றிவிட்டேன். சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு உடல் செயல்பாடுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதே அந்தப் படங்களை பதிவிட்டேன்’ என்று தன்னிலை விளக்கத்தைப் பகிர்ந்துள்ளார்.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai