இந்த வாரம் வெளியாகவுள்ள நான்கு தமிழ்ப் படங்கள்

ஜோதிகா நடித்த ராட்சசி உள்ளிட்ட நான்கு தமிழ்ப் படங்கள் இந்த வாரம் வெளிவரவுள்ளன...
இந்த வாரம் வெளியாகவுள்ள நான்கு தமிழ்ப் படங்கள்

ஜோதிகா நடித்த ராட்சசி உள்ளிட்ட நான்கு தமிழ்ப் படங்கள் இந்த வாரம் வெளிவரவுள்ளன.

ஜூலை 4 அன்று ஸ்பைடமேன் ஃபார் ஃப்ரம் ஹோம் (Spider Man Far From Home) படம் ஆங்கிலம் மற்றும் தமிழில் வெளியாகவுள்ளது. ஜூலை 5 அன்று ராட்சசி, களவானி 2, காதல் முன்னேற்ற கழகம் ஆகிய படங்களும் வெளிவரவுள்ளன. ஜீவா நடித்த கொரில்லா படம் ஜூலை 5 அன்று வெளிவரவிருந்தது. ஆனால் இப்போது தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

ஓவியா, விமல் நடிப்பில் சற்குணம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் - களவாணி 2. இது சிலவருடங்களுக்கு முன்பு வெளியான களவாணி படத்தின் இரண்டாம் பாகம். நடிகர் விமலின் 25-வது படம். களவாணி 2 படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உயர்நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இதனால் இந்த வாரம் வெளியாகிறது.

டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் கெளதம் ராஜ் இயக்கியுள்ள படம் - ராட்சசி. இசை - ஷான் ரோல்டன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com