சுடச்சுட

  

  வனிதாவுக்கும் எனக்குமிடையில் ஒன்றுமில்லை, எல்லாம் விளம்பரத்திற்காக செய்தது!: டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்

  By சரோஜினி  |   Published on : 08th July 2019 02:36 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  vanitha_vijayakumar

   

  வனிதா விஜயகுமார் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்டை மூன்றாவதாகத் திருமணம் செய்ய உள்ளார் என கடந்த வருடத்தில் ஒரு புகார் கிளப்பப்பட்டது. அதை இரு தரப்பாரும் மறுத்து வந்த நிலையில், சமீபத்தில் வனிதா விஜயகுமார் பிக்பாஸ் சீஸன் 3 போட்டியாளராகக் களமிறங்கிய பின் அதே விமர்சனம் மீண்டும் முன்வைக்கப்பட்டது. அதையொட்டி சமீபத்தில் இணைய ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் தங்கள் இருவருக்குமிடையிலான உறவு குறித்தும் பிக்பாஸ் சீஸன் 3 போட்டி குறித்தும் தனது கருத்துக்களை டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் தெரிவித்தது;

  எனக்கும், வனிதா விஜயகுமாருக்குமிடையிலான உறவு என்பது ஒரு நடிகர் கம் நடன இயக்குனருக்கும் படத்தின் தயாரிப்பாளருக்குமிடையிலான உறவு மட்டுமே தான். வனிதாவுக்கு எப்போதுமே பப்ளிசிட்டி ரொம்பப் பிடிக்கும். நாங்கள் ‘எம் ஜி ஆர் சிவாஜி ரஜினி கமல்’ திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது படத்தின் புரமோஷனுக்காக நிறைய ஸ்டில்கள் எடுத்தார்கள். அதில் பல ஸ்டில்கள் நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டாற் போன்ற தோற்றத்தில் எடுக்கப்பட்டிருந்தன. படத்திற்காகத்தானே என்று நான் ஒன்றும் சொல்லவில்லை. அப்போது நேர்காணல்களில் எங்களது ரிலேஷன்ஷிப் குறித்து கேள்வி வந்த போது வனிதா ஆமாம் எனும் தொனியில் பதில் சொல்லவே, நான் பதறிப்போய், என்ன மேடம் இது? என்று கேள்வி கேட்கத்தான் செய்தேன். அதற்கு வனிதா, படத்தின் புரமோஷனுக்கு இதெல்லாம் தேவை. அப்போது தான் நம் படத்தைப் பார்க்க மக்கள் தியேட்டருக்கு வருவார்கள் என்று சொல்லிவிட்டார். என் மனைவி என்னைக் கேள்வி கேட்டு திட்டத்தான் செய்தார். நடந்தது இது தான். மற்றபடி எங்களுக்கிடையில் வேறு எந்தவிதமான நட்பும் இல்லை. அவர் தயாரிப்பாளர். நான் அவரது படத்தில் பணிபுரிந்தேன். அவ்வளவு தான். என்கிறார் ராபர்ட்.

  பிக்பாஸ் சீஸன் 3 குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில்;

  • போட்டியில் எல்லோருமே ‘ஃபேக்’ (போலித்தனம்) ஆகத்தான் இருக்கிறார்கள்.
  • நடிகர் சரவணன், இயக்குனர் சேரன், பாடகர் மோகன் வைத்யா உட்பட பலரும் தங்களது உண்மையான முகத்தைக் காட்டவில்லை என்று தான் எனக்குத் தோன்றுகிறது. அவர்களெல்லோரும் இன்னும் விளையாடவே ஆரம்பிக்கவில்லை. 
  • பிக்பாஸ் குழந்தைகள் பார்க்கத்தக்க நிகழ்ச்சியே அல்ல. அதில் நடக்கும் சண்டைகளைப் பார்த்தால் நமக்கே பயங்கரமாக இருக்கிறது.
  • எங்கள் குழுவில் டான்ஸர் பெண்கள் எல்லோரும் பாடலுக்கு ரிகர்சல் பார்க்கும் போது கழுத்துக்கீழே துணியால் மறைத்துக் கொண்டிருப்பார்கள். ஷாட்டுக்குப் போகும் போது தான் அதை எடுத்து விட்டுச் செல்வார்கள். ஆனால், பிக்பாஸில் உடை  விஷயத்தில் சர்வ சுதந்திரமாக இருக்கிறார்கள். 
  • பிக்பாஸ் ஆண்கள் இதுவரை விட்டுக்கொடுத்தே செல்வதைப் போலத்தான் தோன்றுகிறது. எப்போது தங்களது சுயரூபத்தைக் காட்டுவார்கள் என்று தெரியவில்லை. காட்டினால் தான் ஆட்டம் களை கட்டும்.
  • நான் பிக்பாஸுக்குள் நுழைவேனா என்று சிலர் கேட்கிறார்கள். நிச்சயமாக இந்த சீஸனில் இல்லை. அடுத்த சீஸனில் அழைத்தால் ஒருவேளை போகலாம். இந்த சீஸனில் போனேன் என்று வையுங்கள், வனிதாவைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை அதனால் தான் மாஸ்டர் பிக்பாஸ் வீட்டின் சுவரேறிக் குதித்து ஜன்னலை உடைத்து உள்ளே சென்று விட்டார் என்றெல்லாம் புரளியைக் கிளப்பி விடுவார்கள். இதெல்லாம் தேவையா?
  • சிம்பு பிக்பாஸுக்குப் போவாரா என்று சிலர் என்னிடம் கேட்கிறார்கள். என்னைக் கேட்டால், தலைவருக்கு அங்கெல்லாம் செல்லுமளவுக்குப் பொறுமை இல்லை என்று தான் சொல்வேன். அவர் மனதில் பட்டதை பட் பட்டென்று பேசக்கூடியவர். பிக்பாஸுக்கெல்லாம் போனால் டென்சனில் சேரைத் தூக்கி அடித்து மைக்கை கழட்டி விசிறி விட்டு வந்து விடுவார். 

  - என்கிறார் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai