சுடச்சுட

  

  அந்தப் படத்துக்கு என் பெயரைப் பரிந்துரையுங்கள்: ஊடகங்களிடம் கோரிக்கை வைத்த தாப்சி!

  By எழில்  |   Published on : 13th July 2019 11:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  taapsee111xx

   

  பிரபல கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜின் வாழ்க்கை, திரைப்படமாக உருவாகவுள்ளது.
   
  தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்த துரைராஜ் - லீலாராஜ் ஆகியோருக்குப் பிறந்த மிதாலி ராஜ் ஆரம்ப காலங்களில் ராஜஸ்தானின் ஜோத்பூரில் வசித்தார். பிறகு மிதாலியின் குடும்பம் பிறகு ஹைதராபாத்துக்கு இடம்மாறியது. முதலில் பரதநாட்டியம் கற்றுவந்த மிதாலி பிறகு தந்தையின் உந்துதலால் கிரிக்கெட்டிலும் ஆர்வம் செலுத்தி பிறகு இந்திய அணியில் இடம்பிடித்தார். வீரராகவும் கேப்டனாகவும் இந்திய மகளிர் கிரிக்கெட்டில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார் மிதாலி ராஜ். 

  1999-ம் ஆண்டு தனது முதல் ஒருநாள் கிரிக்கெட்டை விளையாடிய மிதாலி ராஜ் மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் 200 ஒருநாள் ஆட்டங்களை விளையாடிய முதல் வீராங்கனை என்கிற சாதனையைச் சமீபத்தில் நிகழ்த்தினார். 2017-ல் மகளிர் ஒரு நாள் கிரிக்கெட்டில் 6,000 ரன்கள் குவித்த முதல் வீராங்கனை என்ற உலக சாதனையைப் படைத்தார். இதுவரை 10 டெஸ்டுகளிலும் 203 ஒருநாள் ஆட்டங்களிலும் விளையாடியுள்ளார்.

  இந்நிலையில் மிதாலி ராஜின் அற்புதமான கிரிக்கெட் வாழ்க்கை திரைப்படமாக உருவாகவுள்ளது. மிதாலி ராஜ் வேடத்தில் தாப்சி நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

  இந்நிலையில், மும்பையில் புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக வானொலி நிலையம் ஒன்றின் நிதி திரட்டும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் நடிகை தாப்சி. அப்போது அவரிடம், மிதாலி ராஜ் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிப்பது குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு தாப்சி அளித்த பதில்:

  எனக்கு அந்தப் பட வாய்ப்பு கிடைத்தால், கிரிக்கெட் விளையாடி நடிப்பது ஜாலியாக இருக்கும். உங்களில் யாருக்காவது அப்படக் குழுவினரைத் தெரிந்தால் என் பெயரைப் பரிந்துரையுங்கள். ஏனெனில் அந்தப் படத்தில் நடிக்க நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன் என்றார். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai