சுடச்சுட

  

  யோகா நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள ஐஸ்வர்யா ஆர். தனுஷ்!

  By எழில்  |   Published on : 18th July 2019 03:27 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  aishwarya_rajini8771xx

   

  சர்வா என்கிற யோகா நிறுவனத்தின் முதலீட்டாளர்களில் ஒருவராக இணைந்துள்ளார் ஐஸ்வர்யா ஆர். தனுஷ். 

  முதல்முறையாக வியாபாரத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ள ஐஸ்வர்யா தனுஷ், இந்த முதலீட்டின் மூலம் தென்னிந்தியாவில் சர்வா நிறுவனத்தின் திவா யோகாவின் வளர்ச்சியை வழிநடத்திச் செல்வார். 

  2016-ல் தொடங்கப்பட்டது சர்வா யோகா நிறுவனத்தின் நிறுவனர்களாக உள்ளார்கள் சர்வேஷ் ஷஷி மற்றும் நடிகை மலைகா  அரோரா. இது நேரடி மற்றும் டிஜிடல் வடிவில் யோகாவினால் உண்டாகும் பலனை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கிறது. சர்வா நிறுவனத்துக்கு பாலிவுட் நட்சத்திரங்கள் மலைகா அரோரா, சாஹித் கபூர், பாப் நட்சத்திரம் ஜெனிபர் லோபஸ் போன்றோர் நிதியளித்துள்ளார்கள். உலகளவிலான மூதலீட்டின் மூலம் 34.47 கோடி ரூபாய் நிதி இந்நிறுவனத்துக்குச் சேர்ந்துள்ளது. அடுத்த மாதத்தில் இந்தியாவில் உள்ள சர்வா ஸ்டூடியோக்களின் எண்ணிக்கை 100-ஐ தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஓயோ நிறுவனத்துடன் இணைந்து 2022-க்குள் 500 ஸ்டூடியோக்களை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 

  சர்வா நிறுவனம் தென்னிந்தியாவில் செயல்பாடுகளை அதிகரிக்க இந்த இணைப்பு உதவும் என்று கூறியுள்ளார் ஐஸ்வர்யா ஆர். தனுஷ். அடுத்த 5 வருடங்களில் 10 கோடி மக்களைச் சென்று சேரத் திட்டமிட்டுள்ளது. அடுத்த ஒரு மாதத்தில் இந்தியா முழுக்க 100 ஸ்டூடியோக்களைத் திறக்கவுள்ளது. தினமும் 18,000 உறுப்பினர்கள் என  வாரத்துக்கு 3500 வகுப்புகளை இந்நிறுவனம் நடத்தி வருகிறது. சர்வாவின் திவா யோகா ஸ்டூடியோ - பெண்களுக்கான பிரத்யேக யோகா மையம், அடுத்த இரு மாதங்களில் சென்னையில் செயல்படவுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai