சுடச்சுட

    

    அம்மன் வேடத்தில் பிக் பாஸ் ஜூலி: டிரெய்லர் வெளியானது!

    By எழில்  |   Published on : 19th July 2019 10:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    amman_thaaye7

     

    ஜல்லிக்கட்டுப் போராட்டம், பிக்பாஸ் என பிரபலமானவர் ஜூலி. தற்போது திரைப்படங்களில் நடித்து வரும் இவர், அம்மன் தாயி படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். கேசவ் புரொடக்ஷன்ஸ் மற்றும் ரா. தமிழன் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளது. அன்பு கதாநாயகனாக நடித்துள்ளார்.

    இரட்டை இயக்குநர்கள் வரிசையில் மகேஸ்வரன் - சந்திரஹாசன் இருவரும் இணைந்து இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார்கள். 

    இயக்குநர்கள் இப்படம் பற்றி கூறியதாவது: ஜூலி கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் முதலில் இப்படத்தில் நடிக்கத் தயங்கினார். பின்பு எடுக்கப்பட்ட புகைப்படங்களை பார்த்து ஆச்சர்யம் கொண்டு இதில் நடித்தார். அம்மன் சம்பந்தப்பட்டகாட்சிகள் படமாக்கப்படும் நாட்களில் அதற்கான விரதங்கள் இருந்து நடித்துக் கொடுத்தார். அதேபோல படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் அம்மன் நடனம் ஆடிக்கொண்டே வில்லனை வதம் செய்யும் காட்சி ஒன்று உள்ளது. அதற்காகவும் முறைப்படி பயிற்சி எடுத்துக்கொண்டு தான் நடித்துள்ளார்'' என்று கூறியுள்ளார்கள். 

    இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai