பத்து நிமிடத்திற்கு மேல் நேரத்தைச் செலவிட வேண்டாம்! குறும்பட இலக்கணம் இதுதான்!

உலகம் முழுவதும், தங்களது எண்ணங்களைத் திரைப்படமாக்க முயற்சித்த பலர், அதைச் செய்ய இயலாத நிலையில் குறும்படங்களை உருவாக்கத் தொடங்கினர்.
பத்து நிமிடத்திற்கு மேல் நேரத்தைச் செலவிட வேண்டாம்! குறும்பட இலக்கணம் இதுதான்!

உலகம் முழுவதும், தங்களது எண்ணங்களைத் திரைப்படமாக்க முயற்சித்த பலர், அதைச் செய்ய இயலாத நிலையில் குறும்படங்களை உருவாக்கத் தொடங்கினர். அதன் தொடர்ச்சியாகப் பல்வேறு மொழிகளில் குறும்படங்கள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. தமிழ் மொழியிலும் பல குறும்படங்கள் வெளியாகி இருக்கின்றன. 

ஒரு நிகழ்வை, கருத்தை, கதையை குறுகிய நேரத்தில் அழுத்தமாகத் தொழில்நுட்ப நேர்த்தியுடன் படக்காட்சியாக வெளிப்படுத்துவதைக் குறும்படம் என்று சொல்லலாம். ஒரு முழு நீளப்படத்திற்கான இலக்கணங்கள் அனைத்துமே, குறும்படத்திற்கும் பொருந்தும். கதை, திரைக்கதை போன்ற படப்பிடிப்பிற்கு முன்னர் செய்ய வேண்டிய முன்தயாரிப்பு வேலைகளும், படத்தொகுப்பு, இசையமைத்தல் போன்ற பிற்சேர்க்கை வேலைகளும் ஒரு குறும்படத்திற்குத் தேவையானதாக இருக்கின்றன. 

நாற்பது நிமிடங்களுக்கு உட்பட்ட படங்களைக் குறும்படம் என்று ஆஸ்கார் விருதுகளை வழங்கும் 'அகாதமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ்' நிறுவனம் வகைப்படுத்துகிறது. இதையே குறும்படத்திற்கான கால அளவாக அனைவரும் ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். இருப்பினும், பெரும்பான்மையான குறும்படங்கள் பத்து நிமிடங்களுக்கு உட்பட்டே இருக்கின்றன. பத்து நிமிட அளவில் எடுப்பதற்கே அதிகமான பொருட்செலவு செய்ய வேண்டியிருக்கிறது என்று பொதுவான ஒரு காரணம் சொல்லப்பட்டாலும், பத்து நிமிடத்திற்குட்பட்ட படங்களாக இருந்தால், இணையத்தில் அதை எளிதில் பதிவேற்றம் செய்ய முடியும் என்பதுடன், இணையத்தில் அதனைப் பார்வையிடும் பார்வையாளர்கள் பத்து நிமிடத்திற்கு மேல் நேரத்தைச் செலவிடுவதில்லை என்கிற மற்றொரு காரணமும் உண்டு என்கின்றனர். 

மிகக் குறைந்த பணச்செலவு, வசதிகள் கொண்டு உருவாக்கப்படும் பல குறும்படங்கள் படைப்பாளியின் திறனை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கின்றன. இந்தக் குறும்படங்கள் பற்றிய பல்வேறு செய்திகளைக் கொண்டு ஓர் இணையதளம் செயல்பட்டு வருகிறது. 

இத்தளத்தில் Short Shorts, Winners, Best, Genres, Ed's Choice, Famous Directors, Competition , Extras,   A - Z  எனும் முதன்மைத் தலைப்புகள் இடம் பெற்றிருக்கின்றன. 

Short Shorts எனும் தலைப்பில் பல்வேறு குறும்படங்கள் சிறு குறிப்புகளுடன் தரப்பட்டிருக்கின்றன. Winners எனும் தலைப்பில் Oscar Films, Oscar Animation, Oscar Docs, FILMS short Films, BAFTA Films, BAFTA Animation, Cannes Films, Cannes Animation, Sundance Films, Sundance Animation, LA Shorts Films, LA Shorts Animation, Berlinale Films, Berlinale Animation என்கிற துணைத் தலைப்புகளில் குறும்படங்களுக்கான சில அமைப்புகளில் பரிசுக்குரியதாகத் தேர்வு செய்யப் பெற்ற குறும்படங்கள், அனிமேஷன் படங்கள், ஆவணப்படங்கள் போன்றவை சிறு குறிப்புகளுடன் இடம் பெற்றிருக்கின்றன. 

இதேபோன்று Best, Genres,  Ed's Choice,  Famous Directors, Competition , Extras  ஆகிய தலைப்புகளில் பல்வேறு தகவல்களும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. கடைசியாக, ஆங்கில எழுத்துகளின் அகர வரிசைப்படி அனைத்துக் குறும்படங்களும் தொகுத்துத் தரப்பட்டிருக்கின்றன. 

குறும்படத்தினை உருவாக்க முயற்சித்துக் கொண்டிருப்பவர்களுக்கும், குறும்படத்தில் ஆர்வமுடையவர்களுக்கும் பயனுள்ள பல்வேறு தகவல்களைக் கொண்டிருக்கும் இத்தளத்தைப் பார்வையிட விரும்புபவர்கள் https://www.filmsshort.com/ எனும் இணைய முகவரிக்குச் சென்று பயனடையலாம். 

முகப்பு படம் நன்றி - டெய்லி சன்.காம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com