சுடச்சுட

    

    அஜித் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை பட டிரெய்லர் வெளியீடு!

    By எழில்  |   Published on : 12th June 2019 05:57 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    nerkondapaarvai1xx

     

    சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கிய வினோத், அஜித்தின் அடுத்தப் படத்தை இயக்கியுள்ளார். ஹிந்தியில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக்காக நேர்கொண்ட பார்வை என்கிற இந்தப் படம் உருவாகியுள்ளது. அமிதாப் பச்சன் நடித்த வேடத்தில் அஜித் நடித்துள்ளார். இந்தப் படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார். டிசம்பர் மாதம் இப்படம் பூஜையுடன் தொடங்கியது. ஏப்ரலில் படப்பிடிப்பு நிறைவுபெற்றது. 

    இப்படத்துக்கு இசை - யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவு - நிரவ் ஷா. பிரபல பாலிவுட் நடிகையும் தமிழ்ப் பெண்ணுமான வித்யா பாலன், முதல்முறையாக இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். ஷரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, ஆதிக்ரவி, போன்றோரும் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.

    ஆகஸ்ட் 10 அன்று வெளியாகவுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai