வன்மம் வேண்டாம்; வடிவேலு சர்ச்சை குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு கருத்து!

ஒரு படம் நன்றாக ஓடினால் அதில் அனைவருக்கும் பங்குண்டு. அதுவே நஷ்டம் என்றால்...
வன்மம் வேண்டாம்; வடிவேலு சர்ச்சை குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு கருத்து!

சமீபத்தில், இம்சை அரசன் 24-ம் புலிகேசி படம் தொடர்பாக அளித்த பேட்டியொன்றில் இயக்குநர்கள் ஷங்கர், சிம்புதேவனை வடிவேலு அவமரியாதையாகப் பேசியதாகச் சர்ச்சை எழுந்துள்ளது. இதற்குப் பலரும் வடிவேலுவுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்கள். இந்நிலையில் இந்தச் சர்ச்சை குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு ட்விட்டரில் கூறியதாவது:

எப்போதுமே இயக்குநர்தான் கப்பலின் கேப்டன். ஒரு படம் நன்றாக ஓடினால் அதில் அனைவருக்கும் பங்குண்டு. அதுவே நஷ்டம் என்றால், டைரக்டர் சொதப்பிட்டான்பா என்று தான் பரவலாகப் பேசப்படும். என்ன கொடுமை சார் இது! ஒரு ஆகச்சிறந்த கலைஞன், தன்னைக் கதாநாயகனாக வைத்து மிகப்பெரிய வெற்றியைத் தந்த ஒரே தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரைத் தரக்குறைவாகப் பேசியது என்னை மனமுடைய செய்தது. இயக்குநர் சிம்புதேவனை அருகில் இருந்து பார்த்துக்கொண்டு இருக்கிறேன். அவர் அருமையான படைப்பாளி மட்டுமில்லை, மிகச்சிறந்த மனிதர். ஷங்கர் அவர்களைப் பற்றி யாரும்  சொல்லவேண்டிய அவசியம் இல்லை. அவர் என்றுமே கொண்டாடப்பட வேண்டியவர். எல்லோருமே இங்கு மக்களை மகிழ்விக்கத்தான் இருக்கின்றோம். அதில் வன்மம் வேண்டாமே, அன்பை மட்டுமே வளர்ப்போம் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com