நடிகர் சங்கத் தேர்தலுக்கு பாதுகாப்பு அளிக்க மறுப்பது ஏன்?

நடிகர் சங்கத் தேர்தலுக்குப் போலீஸார் பாதுகாப்பு அளிக்க மறுப்பதன் பின்னணியில்  யார் இருந்தாலும்,   நீதிமன்றத்தை நாடி பாதுகாப்பு வழங்கக் கோருவோம் என  நடிகர் நாசர் தெரிவித்தார்.
நடிகர் சங்கத் தேர்தலுக்கு பாதுகாப்பு அளிக்க மறுப்பது ஏன்?

நடிகர் சங்கத் தேர்தலுக்குப் போலீஸார் பாதுகாப்பு அளிக்க மறுப்பதன் பின்னணியில்  யார் இருந்தாலும்,   நீதிமன்றத்தை நாடி பாதுகாப்பு வழங்கக் கோருவோம் என  நடிகர் நாசர் தெரிவித்தார்.
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலையொட்டி, புதுக்கோட்டையில் முத்தமிழ் நாடக நடிகர்கள் சங்கத்தின் உறுப்பினர்களிடம் வாக்கு கோரும் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில் பங்கேற்க வந்த நாசர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வரும் 23-ஆம் தேதி திட்டமிட்டபடி நடைபெறும். தேர்தலுக்கு போலீஸார் பாதுகாப்பு அளிக்க மறுப்பதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் எனத் தெரியவில்லை. 
ஆனால், சட்டப்படி நீதிமன்றத்தை அணுகி பாதுகாப்பு அளிக்க கோருவோம்.  நடிகர் சங்க கட்டடத்தைப் பொருத்தவரை அனைவரும் சேர்ந்துதான் கட்ட வேண்டும். தனிப்பட்ட நபர்கள் யாரும் கட்ட முடியாது. 
அதற்கு உரிமை கோரவும் முடியாது. எங்கள் பாண்டவர் அணியில் கடந்த முறை தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளில் 90 சதவிகிதம் நிறைவேற்றியுள்ளோம். கட்டட கட்டுமானப் பணிகளையும் விரைவில் முடிப்போம். எங்கள் மீது வேறு எந்தக் குறையும் கூற முடியாதவர்கள்தான் கட்டடப் பிரச்னையை எழுப்புகின்றனர். கடந்த முறையைக் காட்டிலும் இந்தத் தேர்தலில் அதிக வாக்குகளைப் பெறுவோம் என்றார் நடிகர் நாசர்.
நடிகர் கருணாஸ் பேட்டி: சங்கரதாஸ் சுவாமிகள் அணியின் பின்னணியில் ராதாரவி இருக்கிறார். கடந்த தேர்தலின்போது ராதாரவி, தனது தந்தையை ஏமாற்றிவிட்டார் எனக் கூறிய ஐசரி கணேஷ் தற்போது ராதாரவியுடன் இணைந்து வாக்கு சேகரித்து வருவதன் நோக்கம் என்ன. நடிகர்களின் வாக்குகளை விலைக்கு வாங்க முயற்சிக்கிறார்கள். அது நடக்காது. சங்க விதிமுறைகளுக்கு முரணாக செயல்பட்டவர்கள் மட்டுமே நீக்கப்பட்டுள்ளனர். 
நாடக நடிகர்களை திரைப்படங்களில் நடிக்க வைப்பதற்கு நடிகர் சங்கம் பரிந்துரைதான் செய்ய முடியுமே தவிர, அதுகுறித்து முடிவெடுப்பது அந்தப் படங்களின் இயக்குநரும், தயாரிப்பாளரும்தான் என்றார் கருணாஸ். கூட்டத்தில் நடிகர்கள் பூச்சி முருகன், விக்னேஷ், பசுபதி, நந்தா உள்ளிட்ட பலரும் பங்கேற்று வாக்குகோரினர். 
முன்னதாக, முத்தமிழ் நாடக நடிகர்கள் சங்க அலுவலகத்திலுள்ள சங்கரதாஸ் சுவாமிகள் சிலைக்கு பாண்டவர் அணியினர் மாலை அணிவித்து 
மரியாதை செலுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com