நடிகர் சங்கத் தேர்தல் விவகாரத்தில் தலையிட ஆளுநர் மறுப்பு: பாக்யராஜ் பேட்டி

இந்தத் தேர்தல் நான் சம்பந்தப்பட்டது அல்ல, நான் எந்தப் பக்கமும் இல்லை...
நடிகர் சங்கத் தேர்தல் விவகாரத்தில் தலையிட ஆளுநர் மறுப்பு: பாக்யராஜ் பேட்டி

நடிகர் சங்கத்தில் இருந்து உறுப்பினர்கள் 61 பேர் நீக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், வரும் 23-ஆம் தேதி நடைபெற இருந்த சங்கத்தின் தேர்தலை நிறுத்த தென் சென்னை சார் பதிவாளர் நேற்று உத்தரவிட்டார். 

நடிகர் சங்கத் தேர்தலை சங்கங்களின் பதிவாளர் நிறுத்திய நிலையில் கே. பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியைச் சேர்ந்த கே. பாக்யராஜ், ஐசரி கணேஷ், சங்கீதா, குட்டி பத்மினி, பிரசாந்த் ஆகியோர் ஆளுநர் மாளிகையில் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்தித்துப் பேசினார்கள். விஷால் அணியைத் தொடர்ந்து பாக்யராஜ் அணியினர் ஆளுநரைச் சந்தித்து நடிகர் சங்கப் பிரச்னை தொடர்பாக விவாதித்துள்ளார்கள். 

இந்தச் சந்திப்பு குறித்து பாக்யராஜ் பேட்டியளித்ததாவது:

நேற்று பாண்டவர் அணியினர் ஆளுநரைச் சந்தித்தார்கள். நாங்களும் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தோம். தேர்தலுக்குப் பாதுகாப்பு அளிப்பது குறித்து நாங்களும் பேசினோம். இந்தத் தேர்தல் நான் சம்பந்தப்பட்டது அல்ல, நான் எந்தப் பக்கமும் இல்லை என்றார் ஆளுநர். பதிவாளரின் உத்தரவு உள்ளிட்ட நடிகர் சங்கத் தேர்தல் குறித்த எல்லாத் தகவல்களையும் ஆளுநர் அறிந்துள்ளார். நீதிமன்றம் தேர்தலுக்கு அனுமதி அளித்தபிறகு தேவைப்பட்டால் பாதுகாப்பு குறித்து கோரிக்கை கொடுங்கள். அப்போது பார்க்கலாம் எனக் கூறினார் என்று பாக்யராஜ் பேட்டியளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com