முதன் முறையாக சச்சு... இரண்டாம் முறையாக மோகன்...

பழம்பெரும் நடிகையான சச்சு இந்தத் தேர்தலில் முதன்முதலாக வாக்களித்துள்ளார். அதேபோல், கடந்த தேர்தல் போலவே, இந்தத் தேர்தலிலும் நடிகர் மோகனின் வாக்கை வேறு யாரோ ஒருவர் பதிவு செய்து விட்டார். 

"காதலிக்க நேரமில்லை' உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்து புகழ் பெற்ற சச்சு, சுமார் 50 வருடங்களுக்கு மேலாக தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உறுப்பினராக உள்ளார்.  எம்.ஜி.ஆர், சிவாஜி காலகட்டத்தில் இருந்தே, நடிகர் சங்கத்தின் ஆக்கப் பணிகளில் ஆர்வமாக இருந்து வரும் சச்சுவுக்கு, கடந்த தேர்தலில் உறுப்பினர் அட்டையை புதுப்பிக்காத காரணத்தால், அவருக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டது.  ஆனால், இந்த முறை தனது வாக்கினை அவர் பதிவு செய்தார். சுமார் 20 வருடங்களுக்குப் பின் நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களித்ததில் மகிழ்ச்சி என்று தெரிவித்தார் சச்சு. கடந்த முறை போலவே, இந்தத்  தேர்தலிலும் நடிகர் மோகனின் வாக்கினை வேறு யாரோ ஒருவர் பதிவு செய்து விட்டதால் ஏமாற்றத்துடன் அவர்  திரும்பி சென்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com