சுடச்சுட

  

  கவின் மீதான அபிராமியின் அன்பு, காதலாக மலருமா?: ‘பிக் பாஸ்’ எதிர்பார்ப்பு!

  By எழில்  |   Published on : 25th June 2019 11:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  abirami_kavin1

   

  பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் வருடம் ஆரவ் - ஓவியா காதல் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது. ஓவியா அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியே வருவதற்கு அந்தக் காதலே முக்கியக் காரணமாக அமைந்தது. 

  கடந்தமுறை இரண்டு காதல்கள். மஹத் - யாஷிகா, ஷாரிக் - ஐஸ்வர்யா தத்தா.

  இந்தமுறை முதல் நாளன்றே ஒரு காதல் ஜோடியை உருவாக்க முயன்றுள்ளார் பிக் பாஸ். நடிகை அபிராமி வெங்கடாச்சலம், நடிகர் கவின் மீதான தனது விருப்பத்தைத் தெரிவிக்கும் சம்பவம் நேற்று நிகழ்ச்சியில் ஒளிபரப்பானது. 

  பிக் பாஸ் நிகழ்ச்சி அரங்கில், முதல் நாளன்று நள்ளிரவில் நடிகைகள் அபிராமியும் ஷெரினும் மனம் திறந்து பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது நடிகர் கவின் மீது தனக்கு விருப்பம் உள்ளதாகத் தெரிவித்தார் அபிராமி.

  அபிராமி: என் அம்மா, சரவணன் மீனாட்சி நாடகம் பார்க்கும்போது, தமிழ் (கவின்) நல்லா இருக்கான் இல்லை அம்மா என்று கூறுவேன். நானும் கவினும் ஃபேஸ்புக் நண்பர்கள். முதலில் அவர் பெயரில் உள்ள போலியான கணக்கில் இருந்து எனக்கு அழைப்பு வந்தபோது ஆச்சரியப்பட்டேன். பிறகுதான் அது போலியான கணக்கு எனத் தெரிந்தது. பிறகு அவரிடம் கேட்டேன். அது போலி என்றார். இங்கு அவர் வந்தவுடன் நான் அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்து கூறினேன். நான் தான் அவருக்கு முதலில் வாழ்த்து சொன்னதற்குச் சந்தோஷப்பட்டேன். அவர் என்னை வாங்க போங்க என்று அழைக்கிறார். இந்த மூஞ்சியிடம் எப்படிச் சொல்வது, உங்கள் மேல் எனக்குக் கிரஷ் இருந்தது என, கேவலமாக இருக்கும். இருந்த மரியாதையும் போய்விடும் என நினைத்தேன். இடையில் சில சமிக்ஞைகள். எல்லோருக்கும் தெரியுது, இவருக்குத் தெரியலையே...

  ஷெரின்: அவர் கியூட்டாக, நகைச்சுவை உணர்வு கொண்டவராக உள்ளார்.

  அபிராமி: ஆமாம். தான் தான் என்கிற மனோபாவம் இல்லாதவர். 

  (அப்போது நடிகை சாக்‌ஷி அகர்வால் அங்கு வந்து விசாரிக்கிறார்.)

  அபிராமி: நான் இவரிடம் சொல்லிவிட்டேன். 

  சாக்‌ஷி: ஓ, ஒரு லவ் ஸ்டோரி ஆரம்பமாகப் போகுது. 

  அபிராமி: அவன் முதல்ல ஓகே சொல்லணும்ல?

  சாக்‌ஷி: நீ யாரைப் பத்தி சொல்ற?

  அபிராமி: நான் கவின் பத்தி சொல்றேன்.

  (உடனே அதிர்ச்சியடைந்தவர் போல நடிக்கிறார் சாக்‌ஷி)

  அபிராமி: ஓ மை காட்!

  (அப்படியே பேசிக்கொண்டிருக்கிறார்கள்)

  அபிராமி: எல்லாம் சொல்லிமுடித்தவுடன், மச்சான், நான் உன்னைப் ஃப்ரெண்டாத்தான் பார்க்கறேன் என்று...

  சாக்‌ஷி: முதலில் உறுதி செய்துகொள். அப்புறம் காதலைத் தெரிவிக்கலாம். இவ்வளவு முயற்சிகள் செய்வதற்கு ஏதாவது பயன் இருக்கவேண்டும். 

  அபிராமி: கண்டுபிடிச்சுடோம்னு வைச்சுக்கோ. வேற லெவல்ல செய்யலாம். 

  நிகழ்ச்சி நிறைவடைகிறது. பிக் பாஸ் பேசுகிறார்: அபிராமியின் அன்பின் வெளிப்பாடு, காதலாக மாறுமா?

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai