சுடச்சுட

  

  அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக பாலிவுட்டில் அறிமுகமாகிறார் கீர்த்தி சுரேஷ்!

  By எழில்  |   Published on : 13th March 2019 03:11 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Keerthy_Suresh444xx

   

  தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற தென்னிந்தியப் படங்களில் நடித்துப் புகழ்பெற்ற கீர்த்தி சுரேஷ், அடுத்ததாக பாலிவுட்டிலும் அறிமுகமாகிறார்.

  1950 முதல் 1963 வரையிலான இந்தியக் கால்பந்து வரலாற்றைச் சொல்வதோடு முன்னாள் இந்தியக் கால்பந்துப் பயிற்சியாளர் சையத் அப்துல் ரஹிமின் வாழ்க்கை வரலாற்றை வெளிப்படுத்தும் ஹிந்திப் படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார் கீர்த்தி சுரேஷ். அஜய் தேவ்கன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை Badhaai Ho படத்தை இயக்கிய அமித் சர்மா இயக்கவுள்ளார். ரிதேஷ் ஷா (பிங்க், ரெயிட்) வசனம் எழுத, சைவின் குவாட்ரஸ் (மேரி கோம்) திரைக்கதை அமைக்கிறார். போனி கபூர் இணைத் தயாரிப்பாளராக உள்ளார். 

  ஜூன் மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai