சுடச்சுட

  

  இரண்டு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ள சங்கீதா!

  By எழில்  |   Published on : 15th March 2019 05:55 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  sangeetha

   

  பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து வரும் படம் தமிழரசன். திமிரு பிடிச்சவன் படத்துக்குப் பின் மீண்டும் இதில் போலீஸ் வேடமேற்று நடிக்கிறார் விஜய் ஆண்டனி. எஸ்.என்.எஸ். மூவீஸ் நிறுவனம் சார்பில் கௌசல்யா ராணி இப்படத்தைத் தயாரிக்கிறார். இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். ரம்யா நம்பீசன் இப்படத்தின் கதாநாயகியாக நடிக்கிறார். வில்லன் கதாபாத்திரத்தில் சோனுசூட் நடிக்கிறார். ராதா ரவி, யோகி பாபு, ரோபோ சங்கர், முனீஸ்காந்த், மாஸ்டர் பிரணவ் போன்றோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

  இந்நிலையில் இந்தப் படத்தில் சங்கீதாவும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். விக்ரம் பிரபுவின் நெருப்புடா படத்துக்குப் பிறகு இரண்டு வருடங்கள் கழித்து சங்கீதா நடிக்கும் படம் இது. 

  எனக்கேற்ற கதாபாத்திரம் சரியாக அமையாததால் பல படங்களில் நடிக்க மறுத்தேன். இந்தப் படத்தில் என் கதாபாத்திரம் மிகவும் பரபரப்பாக பேசப்படும் விதமாக இருந்ததால் ஒப்புக்கொண்டேன். மருத்துவர் வேடத்தில் நடிக்கிறேன் என்று கூறியுள்ளார். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai