சுடச்சுட

  

  திராவிட அரசியலில் மாற்றத்தை உருவாக்க உங்களால் மட்டுமே முடியும்: அஜித்தை அரசியலுக்கு அழைக்கும் இயக்குநர் 

  By DIN  |   Published on : 17th March 2019 02:56 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Ajith-Kumar

   

  சென்னை: திராவிட அரசியலில் மாற்றத்தை உருவாக்க உங்கள் ஒருவரால் மட்டுமே முடியும் என்று நடிகர் அஜித்தை அரசியலுக்கு பிரபல இயக்குநர் ஒருவர் அழைத்திருப்பது விமர்சனங்களை உருவாக்கியுள்ளது.  

  விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள சமயத்தில், தான் அரசியலுக்கு வர விரும்பவில்லை என்று நடிகர் அஜித் சில காலம் முன்பே தெளிவாக ஒரு அறிக்கை வெளியிட்டு விட்டார்.  

  இந்நிலையில் திராவிட அரசியலில் மாற்றத்தை உருவாக்க உங்கள் ஒருவரால் மட்டுமே முடியும் என்று நடிகர் அஜித்தை அரசியலுக்கு பிரபல இயக்குநர் ஒருவர் அழைத்திருப்பது விமர்சனங்களை உருவாக்கியுள்ளது.  

  வெண்ணிலா கபடிக் குழு படம் மூலமாக தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகி நான் மகான் அல்ல, ஜீவா உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் சுசீந்திரன். அவர் அவ்வப்போது தனது ட்விட்டர்  பக்கத்தில் கடிதம் வாயிலாக தகவல்களை பதிவிடுவார்.

  அந்த வகையில் சனிக்கிழமை இரவு அவர் ஒரு கடிதத்தைப் பதிவிட்டிருந்தார். அதில் கூறப்பட்டிருந்தாவது:

  இதில், 40 ஆண்டுகால திராவிட அரசியலில் மாற்றத்தை உருவாக்க உங்கள் ஒருவரால் மட்டுமே முடியும். தமிழக மக்களின் நலன் கருதி உங்களை மக்கள் பணிக்கு அழைக்கிறேன். இதுதான் 100% சரியான தருணம் வா தலைவா, மாற்றத்தை உருவாக்கு.., உங்களுக்காக காத்திருக்கும், பல கோடி மக்களில் நானும் ஒருவன்.  

  இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.

  ஆனால் இதற்கு அஜித் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளது. குறிப்பாக அவர்கள் பதிவிட்ட கருத்துக்களால் #அரசியல் வேண்டாம் அஜித்தே போதும் என்னும் ஹாஷ்டேக ட்ரெண்டிங்கிலிருந்தது.

  வாய்ப்புக் கேட்டு விளம்பரத்திற்காக சுசீந்திரன் இவ்வாறு செய்கிறார் என்னும் கடுமையான விமர்சனங்களும் ட் விட்டரில் முன்வைக்கப்பட்டன.  

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai