சுடச்சுட

  

  விஜய் இயக்கும் படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா!

  By எழில்  |   Published on : 23rd March 2019 10:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  kangana66xx

   

  மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை திரைப்படமாகிறது. இப்படத்தை விஜய் இயக்குகிறார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு கடந்த வருடம் வெளியானது. விப்ரி மீடியாவைச் சேர்ந்த பிருந்தா இப்படத்தைத் தயாரிக்கிறார். சைமா திரைப்பட விருதுகள் இவர் தலைமையில் வருடாவருடம் வழங்கப்பட்டு வருகிறது.  

  தலைவி என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் ஜெயலலிதா வேடத்தில் பிரபல பாலிவுட் கதாநாயகி கங்கனா ரனாவத் நடிக்கிறார். தன்னுடைய பிறந்தநாளில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் கங்கனா. பாகுபலி படத்தின் கதாசிரியரான விஜயேந்திர பிரசாத் இப்படத்திலும் பணியாற்றுகிறார். இசை - ஜி.வி. பிரகாஷ். தமிழ், ஹிந்தியில் இப்படம் உருவாகவுள்ளது.

  இந்தப் படத்தோடு மற்றொரு படமும் உருவாகி வருகிறது. ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக உருவாக்கி வருகிறார், இயக்குநர் மிஷ்கினிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த பிரியதர்ஷினி. தி அயர்ன் லேடி (The Iron Lady) என்று ஆங்கிலத்தில் தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படம் அடுத்த வருடம் பிப்ரவரி 20 அன்று வெளியாகும்  என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளிவரவுள்ளது. இதில், ஜெயலலிதா வேடத்தில் நித்யா மேனன் நடிக்கிறார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai