சுடச்சுட

  

  சனிக்கிழமை வெளியாகவுள்ள அஜித்தின் நேர்கொண்ட பார்வை!

  By எழில்  |   Published on : 25th March 2019 04:21 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  nerkondapaarvai1xx

   

  சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கிய வினோத், அஜித்தின் அடுத்தப் படத்தை இயக்கி வருகிறார். ஹிந்தியில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக்காக நேர்கொண்ட பார்வை என்கிற இந்தப் படம் உருவாகி வருகிறது. அமிதாப் பச்சன் நடித்த வேடத்தில் அஜித் நடித்து வருகிறார். இந்தப் படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்து வருகிறார். டிசம்பர் மாதம் இப்படம் பூஜையுடன் தொடங்கியது. 

  இப்படத்துக்கு இசை - யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவு - நிரவ் ஷா. பிரபல பாலிவுட் நடிகையும் தமிழ்ப் பெண்ணுமான வித்யா பாலன், முதல்முறையாக இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். ஷரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, ஆதிக்ரவி, போன்றோரும் இப்படத்தில் நடிக்கிறார்கள். 

  இந்நிலையில் நேர்கொண்ட பார்வை படம் ஆகஸ்ட் 10 அன்று வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக படங்கள் வியாழன் அல்லது வெள்ளி ஆகிய தினங்களில் வெளியாகும். ஆனால் இந்தப் படம் சனிக்கிழமையன்று வெளியாகவுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai