பிக் பாஸ்- சீசன் 3 மீண்டும் தொகுத்து வழங்குகிறார் கமல்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனையும் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். 
பிக் பாஸ்- சீசன் 3 மீண்டும் தொகுத்து வழங்குகிறார் கமல்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனையும் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். 
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2017, 2018 ஆண்டுகளில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகி வந்தது. 
முதல் சீசனில்  நடிகர் ஆரவ் வெற்றி பெற்றார். இரண்டாவது சீசனில் நடிகை  ரித்விகா வெற்றி பெற்றார்.  ஒவ்வொரு சீசனிலும் 100 நாள்கள்
ஒளிப்பரப்பாகியது.
சுட்டுரையில் மத்திய, மாநில அரசுகளை ஏற்கெனவே விமர்சித்து வந்த நடிகர் கமல்ஹாசன், இந்த நிகழ்ச்சியில்தான் தனது கருத்துகளை வெளிப்படையாகத்
தெரிவித்தார். மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியைத் தொடங்கி தற்போது தேர்தலைச் சந்தித்துள்ளார்.  இந்த நிலையில், பிக் பாஸ் - சீசன் 3 நிகழ்ச்சியையும்
கமல்ஹாசன் தொகுத்து வழங்க இருக்கிறார்.  அரசியல் கட்சி பணிகளுக்கிடையே இந்தியன் 2 படத்தில் நடிக்கவிருக்கும் கமல், இந்த நிகழ்ச்சியையும் தொகுத்து
வழங்க இருக்கிறார். இந்த நிகழ்ச்சி, வரும் ஜூன் மாதத்திலிருந்து விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com