சுடச்சுட

  

  நடிகர் விவேக்கை கலாய்த்த டிக் டாக் விடியோ இதுதான்! (விடியோ)

  By சினேகா  |   Published on : 13th May 2019 12:53 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  vivek

   

  சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை புகுந்து விளையாடும் ஒரு செயலி டிக் டாக். தனது அபிமான நடிகர் நடிகைகளின் பாடல்கள் அல்லது படக் காட்சிகளை அபிநயித்து தங்கள் திறமையை வெளிப்படுத்தும் ஒரு களமாக இருந்து வருகிறது. சிலருக்கு பொழுதுபோக்காக இருந்து வரும் இந்த டிக் டாக் பலவகையிலும் தொல்லையாகவும் இருக்கிறது என்று புகார்கள் வரத் தொடங்கவே, தமிழ்நாட்டில் டிக் டாக் செயலிக்கு இடைக்கால தடை விதிக்க கோரினர்.

  ஆனால் இடைக்கால தடையை உச்சநீதிமன்றம் நீக்கிய பிறகு இளைஞர்கள் சந்தோஷம் அடைந்தனர். இந்த டிக் டாக் செயலி பற்றி இதற்கு முன்பு தெரியாவர்கள் கூட ப்ளே ஸ்டோர் மூலம் அச்செயலியை பதிவிறக்கம் செய்யத் தொடங்கினர். சிலர் காமெடி காட்சிகளை கூட தங்கள் முகபாவத்துடன் டிக் டாக்கில் வெளியிட்டு மகிழ்ந்தனர். 

  தற்போது அப்படியொரு டிக் டாக் விடியோ இணையத்தில் வலம் வருகிறது. அது சாமி படத்தில் விவேக் நடித்திருந்த 'லா ஷகீலா' என்ற காமெடி காட்சிதான். அதனை ஒரு நபர் தன் நாயுடன் நடித்து டிக் டாக்கில் பதிவு செய்து விடியோவை இணையத்தில் பரவ விட்டுள்ளார். இந்த காணொளியைப் பார்த்த நடிகர் விவேக், தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் அதை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியது, ‘அட பாவிங்களா! ஒங்க டிக் டாக் வெறிக்கு ஒரு எல்லை இல்லயா?!?!' என்று கூறி அந்த டிக் டாக் விடியோவையும் பதிவிட்டுள்ளார்.

  தற்போது இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாக வலம் வரத் தொடங்கியுள்ளது.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai