பிரபல படத் தயாரிப்பாளர் காலமானார்!
By DIN | Published on : 13th May 2019 12:58 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

கோலிவுட்டில் விஜயா வாகினி புரொடெக்ஷன்ஸ் என்றால் தெரியாதவர்களே இருக்க முடியாது. தமிழ் திரை உலகில் பழம்பெரும் தயாரிப்பு நிறுவனமான இந்நிறுவனம் 1948-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. எங்க வீட்டுப் பிள்ளை, உழைப்பாளி, உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை தயாரித்த விஜயா வாகினி இன்றும் வெற்றிக்கரமாக தங்கள் பணியைத் தொடர்ந்து தயாரித்து வருகிறது. விஜயா வாகினியின் நிறுவனரான நாகி ரெட்டியின் மறைவுக்குப் பிறகு வெங்கட்ராம ரெட்டி திறம்பட நிர்வகித்து வந்தார்.
தாமிரபரணி, படிக்காதவன், வேங்கை, வீரம், பைரவா ஆகிய படங்கள் இவரது தயாரிப்பில் வெளிவந்துள்ளது. தற்போது நடிகர் விஜய் சேதுபதி இரட்டை வேடங்களில் நடித்து வரும் 'சங்கத்தமிழன்' படத்தை தயாரித்து வந்தார். 75 வயது நிரம்பிய வெங்கட்ராம ரெட்டி, அண்மையில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மே 12-ம் தேதி (ஞாயிறு) பிற்பகல் 1 மணியளவில் காலமானார். இவருக்கு பாரதி ரெட்டி என்ற மனைவியும், ராஜேஷ் ரெட்டி என்ற மகனும், ஆராதனா ரெட்டி, அர்ச்சனா ரெட்டி ஆகிய இரு மகள்களும் உள்ளனர். அவரது இறுதி சடங்குகள் திங்கள் காலை 7.30 - 9.00 மணிக்குள் நெசப்பாக்கத்தில் நடைபெற்றது. திரைப் பிரபலங்கள் தங்கள் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.