சுடச்சுட

  
  mahat_love

   

  அஜித் நடித்த மங்காத்தா படம் மூலமாகத் திரையுலகில் அறிமுகமான மஹத், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று அதிகக் கவனம் பெற்றார்.

  மிஸ் இந்தியா எர்த் 2002 பிரச்சி மிஸ்ராவைக் கடந்த சில வருடங்களாகக் காதலித்து வந்தார் மஹத். இந்நிலையில் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளதாகச் சமீபத்தில் அறிவித்தார் மஹத்.

  பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, மஹத்தைத் தான் காதலிப்பதாக நடிகை யாஷிகா தெரிவித்தார். யாஷிகாவைத் தானும் காதலிப்பதாக மஹத் கூறினார். இதையடுத்து மஹத்தைத் தான் பிரிந்துவிட்டதாக பிரச்சி மிஸ்ரா இன்ஸ்டகிராமில் தெரிவித்தார். பிறகு அந்தப் பதிவை அவர் நீக்கிவிட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து மஹத் வெளியே வந்தபிறகு இருவருடைய மனக்கசப்பும் நீங்கி மீண்டும் காதலர்கள் ஆனார்கள். இந்நிலையில் தற்போது இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

  இன்ஸ்டகிராம் தளத்தில் நிச்சயதார்த்த விடியோவை இருவரும் வெளியிட்டுள்ளார்கள். என் வாழ்வின் மிக முக்கியமான நாட்களில் ஒன்று, என்னுடைய நிச்சயதார்த்தம் நடந்த நாள் என்று கூறியுள்ளார் மஹத்.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai