'ஆன்ட்டி' என அழைத்தமைக்கு இத்தனை கோபமா? 4 வயது குழந்தையை திட்டித்தீர்த்த பிரபல நடிகை!

'ஆன்ட்டி' என அழைத்தமைக்கு 4 வயது குழந்தையை இழிவான சொற்களில் திட்டிய பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கருக்கு டிவிட்டரில் கண்டனம் வலுக்கிறது.

பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கர், 4 வயது குழந்தை நட்சத்திரத்தை ஆக்ரோஷமான வார்த்தைகளில் விமரிசிக்கும் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. அந்த குழந்தை ஸ்வரா பாஸ்கரை ஆண்டி என அழைத்ததன் காரணத்தினால் அவர் தனது கோபத்தை வெளிப்படுத்தியது வெளிப்படையாகத் தெரிகிறது. அதேசமயம், அவர் இழிவான சொற்களைப் பயன்படுத்தியதாகவும் தெரிகிறது.

ஸ்வரா பாஸ்கரைப் பொறுத்தவரை, அந்த குழந்தையின் முகத்திற்கு முன் இழிவான சொற்களைப் பயன்படுத்தவில்லை. ஆனால் மனதில் இழிவான சொற்களை முனுமுனுத்ததாக அவர் தெரிவித்தார்.

இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக டிவிட்டர்வாசிகள் ஸ்வரா பாஸ்கரை விமரிசித்து கண்டனங்களைப் பதிவு செய்யத் தொடங்கினர். இதன்காரணமாக, 'ஸ்வரா ஆண்டி' எனும் ஹேஷ்டேக் இன்று (செவ்வாய்கிழமை) காலை முதல் டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com