தமிழின் சிறந்த படங்களை இயக்கிய அருண்மொழி காலமானார்!

நடிகர், நாடக இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர், நடிப்பு கற்றுத் தரும் ஆசிரியர் என பன்முகத் திறமை படத்தை இயக்குனர் அருண்மொழி (50) நேற்று (நவம்பர் 9, 2019) இரவு காலமானார்.
அருண்மொழி
அருண்மொழி

நடிகர், நாடக இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர், நடிப்பு கற்றுத் தரும் ஆசிரியர் என பன்முகத் திறமை படத்தை இயக்குனர் அருண்மொழி (63) நேற்று (நவம்பர் 9, 2019) இரவு காலமானார். தமிழ் குறும்பட வரலாற்றில் தனித்துவம் மிக்க படைப்பாளியான அருண்மொழி கலை இலக்கிய ஆளுமைகள் பற்றிய ஆவணப்படங்களை இயக்கியுள்ளார். காணி நிலம் எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் லண்டன், ஜெர்மனி உள்ளிட்ட திரைப்பட விழாக்களில் பங்கேற்றன. இவரது இறப்பும் ஒரு திரைப்பட விழாவில் பங்கேற்கும் போது நிகழ்ந்துள்ளது. சென்னையில் நடக்கும் ஜப்பானிய திரைவிழாவில் பார்வையாளராகச் சென்று படம் பார்த்துக் கொண்டிருந்திருந்தவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளார். 

பேரலல் சினிமாவில் மிகுந்த ஆர்வமுடைய அருண்மொழி தரமான படங்களை இயக்கியுள்ளார். ஆவணப் பட இயக்குநர்கள் வரிசையில் முக்கியமானவராகத் திகழ்ந்தார். பூனாவில் திரைப்படக் கல்லூரியில் திரைப்பட இயக்கம் பயின்றவர் அருண்மொழி. பின்னர் இயக்குனர் ருத்ரையாவின் அவள் அப்படித்தான் திரைப்படத்தில் உதவி இயக்குனராக தொடங்கியது அவரது திரைப்பயணம். 1989-ல் நாசரை கதாநாயகனக வைத்து ஏர்முனை எனும் திரைப்படத்தை இயக்கினார். அந்தக் காலகட்டத்தின் முக்கிய பிரச்னையான செயற்கை ரசாயனம் குறித்த விழிப்புணர்வுத் திரைப்படம் இது. வணிகரீதியாக வெற்றி பெறாவிட்டாலும் திரை ஆர்வலர்களின் கவனத்தை கவர்ந்த படமிது. வணிகரீதியான படங்களை இயக்கவும், நடிக்கவும் அவருக்கு வந்த வாய்ப்புக்களை மறுத்தவர். கலைக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்த ஒருவராக வாழ்நாள் முழுவதும் திகழ்ந்தார்.

மாஞ்சோலை தொழிலாளா்கள் மீதான துப்பாக்கிச் சூடு வழக்கு விசாரணை குறித்த ‘சிறுதுளி’, ‘நிலமோசடி’, ‘தோழி’ ஆகிய ஆவணப்படங்களை இயக்கினாா். கி.ராஜநாராயணன், ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, இளையராஜா என பிரபலங்கள் குறித்த ஆவணப்படங்களையும் இயக்கியுள்ளாா்.

இசைவானில் இன்னொன்று, திருநங்கைகள், மூன்றாவது இனம், அருணா, நூரியின் கதை, இரண்டாம் பிறவி, விடியல் வரும், தோழி Beware of commisions, key maker உள்ளிட்ட பல ஆவணப்படங்களை இயக்கியுள்ளார். எழுத்தாளர்கள், சிந்தனையாளர்களின் வாழ்க்கை வரலாற்றையும் ஆவணப்படங்களாக எடுத்துள்ளார் அருண்மொழி.

கடந்த சில ஆண்டுகளில் 'ஸ்தானிஸ்லாவிஸ்கி' என்ற பெயரில் திரைப்பட பயிற்சி பட்டறையையும் நடத்தி வந்தாா். அவரிடம் நடிப்பு கற்றுக் கொண்ட மாணவர்கள் திரைப்படத் துறையிலும், ஊடகங்களிலும் சிறப்பான பங்களிப்புகளைச் செய்து வருகின்றனர்.

அருண்மொழியின் மறைவிற்கு  சமூக வலைதளங்களில் இரங்கல் செய்திகள் குவியத் தொடங்கியுள்ளன. இயக்குனர் வசந்த், லெனின் பாரதி, ஹரிஹரன் உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். எழுத்தாளர்கள், முகநூல் பதிவர்கள், அருண்மொழியின் மாணவ, மாணவிகள், திரைப்பட இயக்குநர்கள் என பலரும் அவரது மறைவுக்கு அஞ்சலி தெரிவித்து வருகின்றனர்.

திருவான்மியூரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அவரது உடல், பெசன்ட் நகா் மின் மயானத்தில் ஞாயிற்றுக்கிழமை தகனம் செய்யப்பட்டது.

இயக்குனர் மிஷ்கின் தனது இரங்களை காணொலியில் பதிவு செய்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com