அகோரியாக ரீஎன்ட்ரி ஆகும் குட்டி ராதிகா

'இயற்கை' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி பரவலாகக் கவனம் பெற்றவர் குட்டி ராதிகா.
agori getup
agori getup

'இயற்கை' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி பரவலாகக் கவனம் பெற்றவர் குட்டி ராதிகா.

2006-ஆம் ஆண்டுக்குப் பின் தமிழ் சினிமாவில் இருந்து ஒதுங்கியவர், தற்போது 13 ஆண்டுகால இடைவெளிக்குப் பின் 'தமயந்தி' என்ற படத்தின் மூலம் தமிழுக்கு மீண்டும் திரும்புகிறார். இப்படத்தை நவரசன் எழுதி இயக்குகிறார். 

படம் குறித்து இயக்குநர் பேசும் போது,  'தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் இப்படம் தயாராகிறது. ஹிந்தி, மலையாளம் மொழிகளிலும் எடுக்கப்பட்டு வருகிறது. 'அருந்ததி', 'பாகமதி' ஆகிய படங்கள் போன்ற ஹாரர் திரில்லர் படம் தமயந்தி. இதில் நடிக்க முதலில் அனுஷ்காவை தொடர்பு கொண்டேன்.

அவருக்குத் திரைக்கதை மிகவும் பிடித்திருந்தாலும் மற்ற படங்களில் ஒப்பந்தமாகியிருந்ததால் அவரால் நடிக்க முடியவில்லை. எனது இரண்டாவது தேர்வு குட்டி ராதிகா. அவரும் இரண்டு கன்னடப் படங்களில் பிஸியாக இருந்தார்.

ஒரு முறை கதையைக் கேளுங்கள் என்று கூறி அவரிடம் விவரித்தேன். கேட்டபின் தான் நடிப்பதாக உடனே சம்மதித்தார். இரண்டு கால கட்டங்களில் நடக்கும் இக்கதை ஹைதராபாத், பெங்களுரூ உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட்டு வருகிறது' என்றார். 

இப்படத்தில் ரமேஷ் அரவிந்த், ரங்கயாணா ரகு, ரவி பிரசாத், சுசித்ரா பிரசாத் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். குட்டி ராதிகா பெண் அகோரி வேடத்தில் நடித்துள்ளார். இந்தக் கதாபாத்திரத்துக்காக நான்கு மணி நேரம் மேக் அப் போட்டுள்ளார். படத்தின் முக்கிய காட்சிகள் காசியில் படமாக்கம் செய்யப்பட்டது.

தமிழ், தெலுங்கு, கன்னடம என மும்முமொழ்யில் எடுக்கப்பட்ட தமயந்தி, இம்மாத இறுதியில் இப்படத்தை வெளியிட இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com