நியூயார்க்கில் தனது 35-வது பிறந்தநாளை விக்னேஷ் சிவனுடன் கொண்டாடும் நயன்தாரா (படங்கள்)
By எழில் | Published on : 18th November 2019 01:05 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

பிரபல நடிகை நயன்தாரா தனது 35-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். திரையுலகினர், ரசிகர்கள் எனப் பலரும் அவருக்குச் சமூகவலைத்தளங்களில் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.
இந்நிலையில் இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் நியூயார்க்கில் தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார் நயன்தாரா. இது தொடர்பான இரு புகைப்படங்களை இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டகிராம் தளத்தில் வெளியிட்டுள்ளார்.
விஸ்வாசம், ஐரா, மிஸ்டர் லோக்கல், கொலையுதிர் காலம், பிகில் என இந்த வருடம் நயன்தாரா நடித்த ஐந்து தமிழ்ப் படங்கள் வெளியாகியுள்ளன. ரஜினி நடிக்கும் தர்பார் படத்தில் தற்போது நடித்து முடித்துள்ள நயன்தாரா, அடுத்ததாக இரு படங்களில் நடித்து வருகிறார். நயன்தாராவின் 65-வது படமான நெற்றிக்கண்ணை விக்னேஷ் சிவனின் ரெளடி பிக்சர்ஸ் தயாரிக்கிறது. மிலிந்த் ராவ் இப்படத்தை இயக்குகிறார். இவர் இதற்கு முன்பு சித்தார்த் நடித்த அவள் படத்தை இயக்கினார். கதாநாயகி கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டுள்ள இப்படத்துக்கு இசை - கிரிஷ். அடுத்ததாக, ஆர்ஜே பாலாஜி - சரவணன் இயக்கும் மூக்குத்தி அம்மன் என்கிற படத்திலும் கதாநாயகியாக நடிக்கிறார் நயன்தாரா.