ரஜினியின் தர்பார் படம்: வெளியீட்டுத் தேதியை அறிவித்தது லைகா நிறுவனம்

தர்பார் படத்தின் வெளியீட்டுத் தேதியைத் தனது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளது லைகா நிறுவனம்.
ரஜினியின் தர்பார் படம்: வெளியீட்டுத் தேதியை அறிவித்தது லைகா நிறுவனம்

சர்கார் படத்தையடுத்து ரஜினி நடிக்கும் தர்பார் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கி வருகிறார். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு - சந்தோஷ் சிவன். இசை - அனிருத். தயாரிப்பு - லைகா நிறுவனம். இது ரஜினி நடிக்கும் 167-வது படம்.

ரஜினியின் ஜோடி - நயன்தாரா. இந்தப் படத்தில் காவல் அதிகாரியாக நடித்து வருகிறார் ரஜினி. தர்பார் படத்தின் வில்லனாக பாலிவுட் நடிகர் பிரதீக் பப்பர் நடிக்கிறார்.

இந்நிலையில் தர்பார் படத்தின் வெளியீட்டுத் தேதியைத் தனது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளது லைகா நிறுவனம். ஜனவரி 9 அன்று தர்பார் வெளியாகவுள்ளது. இதனால் இந்தப் படம் பொங்கல் விடுமுறை தினங்களால் அதிக வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com