ரூ.144 கோடிக்கு பங்களா வாங்கிய பிரியங்கா சோப்ரா!

அமெரிக்காவில் நடிகை பிரியங்கா சோப்ரா ரூ.144  கோடிக்கு பங்களா வாங்கியுள்ளார்.
ரூ.144 கோடிக்கு பங்களா வாங்கிய பிரியங்கா சோப்ரா!

பாலிவுட், ஹாலிவுட் என பிரபலமடைந்தாலும் பிரியங்கா சோப்ராவின் அறிமுகம் தமிழில்தான் நடந்தது.

விஜய் ஜோடியாக "தமிழன்' படத்தில்தான் அறிமுகமானார். 2002-ஆம் ஆண்டு வெளியான இப்படத்தை மஜீத் இயக்கினார். பின்னர் ஹிந்திக்குச் சென்றவர் அங்கு தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தார்.

ஏராளமான படங்களில் நடித்த பிரியங்கா "குவான்டிகோ' என்ற ஹாலிவுட் சீரியலில் நடித்து புகழ் பெற்றார். அமெரிக்கா பாப் பாடகர் நிக் ஜோன்சைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு அமெரிக்காவில் தங்கினார். அங்கு தனக்கென ஒரு கனவு இல்லத்தை வாங்க முடிவு செய்தார். அதற்காக பங்களாவைத் தேடி வந்தார். அதற்கு பலன் கிடைத்தது.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சான்பெர்னாண்டோ பள்ளத்தாக்கு பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய 20 ஆயிரம் சதுர அடி பரப்பளவு உள்ள பங்களாவை வாங்கினார்.அமெரிக்க மதிப்பில் 20 மில்லியன் டாலர் விலை கொடுத்து வாங்கிய இந்த பங்களாவின் இந்திய மதிப்பு ரூ.144 கோடி.

சினிமா தியேட்டர், விளையாட்டு மைதானம், நீச்சல் குளம் என அனைத்து வசதிகளுமே அங்கே அடக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com