தர்பார்: அனிருத் இசையமைப்பில் எஸ்.பி.பி. பாடியுள்ள பாடல் வெளியீடு!

தர்பார் படத்தில் ரஜினியின் அறிமுகப் பாடலாக, அனிருத் இசையமைப்பில் பின்னணிப் பாடகா் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியுள்ள ‘சும்மா கிழி’ என்கிற பாடல்... 
தர்பார்: அனிருத் இசையமைப்பில் எஸ்.பி.பி. பாடியுள்ள பாடல் வெளியீடு!

சர்கார் படத்தையடுத்து ரஜினி நடிக்கும் தர்பார் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு - சந்தோஷ் சிவன். இசை - அனிருத். தயாரிப்பு - லைகா நிறுவனம். இது ரஜினி நடிக்கும் 167-வது படம். ரஜினியின் ஜோடி - நயன்தாரா. இந்தப் படத்தில் காவல் அதிகாரியாக நடித்துள்ளார் ரஜினி. வில்லனாக பாலிவுட் நடிகர் பிரதீக் பப்பர் நடித்துள்ளார். தர்பார் படத்தின் வெளியீட்டுத் தேதியைத் தனது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளது லைகா நிறுவனம். அதன்படி, ஜனவரி 9 அன்று தர்பார் வெளியாகவுள்ளது. இதனால் இந்தப் படம் பொங்கல் விடுமுறை தினங்களால் அதிக வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் தர்பார் படத்தில் ரஜினியின் அறிமுகப் பாடலாக, அனிருத் இசையமைப்பில் பின்னணிப் பாடகா் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியுள்ள ‘சும்மா கிழி’ என்கிற பாடல் இன்று வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com