முதல் நாளிலேயே ரூ. 53 கோடி வசூல்: புதிய சாதனை நிகழ்த்தியுள்ள ஹிருத்திக் ரோஷன் படம்!

முதல் நாளன்று இந்தியாவில் அதிகமாக வசூலித்த படம் என்கிற பெருமையைப் பெற்றுள்ளது...
முதல் நாளிலேயே ரூ. 53 கோடி வசூல்: புதிய சாதனை நிகழ்த்தியுள்ள ஹிருத்திக் ரோஷன் படம்!

ஹிருத்திக் ரோஷன், டைகர் ஷெராஃப், வாணி கபூர் நடிப்பில் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள படம்- வார். இந்தப் படம் நேற்று ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியானது. 

வார் படம் வசூலில் மகத்தான சாதனையை நிகழ்த்தியுள்ளது. முதல் நாளிலேயே இந்தியா முழுக்க ரூ. 53.35 கோடி வசூலித்துள்ளது. அதாவது ஹிந்தியில் ரூ. 51.60 கோடியும் தமிழ் மற்றும் தெலுங்கில் ரூ. 1.75 கோடியும் வசூலாகக் கிடைத்துள்ளன. 

இதன்மூலம் முதல் நாளன்று இந்தியாவில் அதிகமாக வசூலித்த படம் என்கிற பெருமையைப் பெற்றுள்ளது. 

சல்மான் நடிப்பில் வெளியான பாரத் படம் முதல் நாளன்று இந்தியாவில் ரூ. 42.30 கோடி வசூலித்து இந்த ஆண்டு அதிகமாக வசூலித்த படம் என்கிற சாதனையைப் படைத்தது. இந்த வருடம் வெளியான அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம் படம் அனைத்து மொழிகளிலும் முதல் நாளன்று இந்தியாவில் ரூ. 53.10 கோடி வசூலித்து பெரிய சாதனையை நிகழ்த்தியது. அமீர் கான் நடிப்பில் வெளியான தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான் படம் முதல் நாளன்று ரூ. 52 கோடி வசூலித்து இந்தியாவில் முதல் நாளில் அதிகமாக வசூலித்த ஹிந்திப் படம் என்கிற சாதனையைப் படைத்தது.

இந்த அனைத்து சாதனைகளையும் வார் படம் தகர்த்து, இந்தியாவில் முதல் நாளன்று அதிகமாக வசூலித்த படம் என்கிற சாதனையை நிகழ்த்தியுள்ளது. பலமான ஆக்‌ஷன் படம் என்பதால் இதற்கு ரசிகர்கள் அதிக அளவில் ஆதரவு அளித்துள்ளார்கள். வரும் நாள்களில் வார் பட மேலும் பல சாதனைகளைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com