பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தடை செய்யவேண்டும்!

இந்திய அளவில் பிரபலமாக உள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தடை செய்யவேண்டும் என்று அகில இந்திய வணிகர்களின் கூட்டமைப்பு  (சிஏஐடி) கோரிக்கை விடுத்துள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தடை செய்யவேண்டும்!

இந்திய அளவில் பிரபலமாக உள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தடை செய்யவேண்டும் என்று அகில இந்திய வணிகர்களின் கூட்டமைப்பு  (சிஏஐடி) கோரிக்கை விடுத்துள்ளது.

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகருக்கு இந்திய வணிகர்களின் கூட்டமைப்பு இது தொடர்பாக எழுதிய கடிதத்தில் கூறியதாவது:

கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆபாசமாகக் காட்சிகள் காண்பிக்கப்படுகின்றன. இந்நிகழ்ச்சியைக் குடும்பத்துடன் இணைந்து பார்க்கச் சிரமமாக உள்ளது. இதை உங்கள் கவனதுக்குக் கொண்டு வருகிறோம். டிஆர்பி-க்காக நம் நாட்டின் பாரம்பரிய, கலாசார விழுமியங்களைச் சிதைப்பதாக உள்ளது. பன்முகத்தன்மையுடன் உள்ள இந்தியா போன்ற ஒரு நாட்டில் இதுபோன்ற நிகழ்ச்சியை நாம் அனுமதிக்கக் கூடாது. 

இந்நிகழ்ச்சி அனைவரும் பார்க்கும் முக்கியமான நேரத்தில் ஒளிபரப்பாவதை நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்கள் மறந்துவிடுகிறார்கள். எல்லா வயதினரும் இந்நிகழ்ச்சியைப் பார்க்கிறார்கள். தற்போதைய பிக் பாஸ் நிகழ்ச்சி எல்லாவிதமான நெறிமுறைகளையும் தாண்டியுள்ளது. எனவே இந்த நிகழ்ச்சியை உடனடியாகத் தடை செய்யவேண்டும் என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. 

அகில இந்திய வணிகர்களின் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பிரவீன் கண்டேல்வால் இதுபற்றிக் கூறியதாவது: பிக் பாஸின் ஒவ்வொரு நிகழ்ச்சியும் தணிக்கை வாரியத்தால் கண்காணிக்கப்பட வேண்டும். நிகழ்ச்சியில் நடப்பதெல்லாம் மிகத் தவறு. எங்களுடைய கோரிக்கையை ஜாவடேகரிடம் வலியுறுத்துவோம் என்று கூறியுள்ளார். 

ஹிந்தி பிக் பாஸ் 13 தொலைக்காட்சி நிகழ்ச்சி சமீபத்தில் தொடங்கியுள்ளது. இந்த வருட நிகழ்ச்சியையும் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் தான் தொகுத்து வழங்குகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com