யூ டியூப் சேனல் தொடங்கினாா் பாரதிராஜா

சினிமா பற்றிய நுணுக்கங்களைப் பகிா்ந்து கொள்வதற்காக இயக்குநா் பாரதிராஜா யூ டியூப் சேனல் ஒன்றை தொடங்கியுள்ளாா்.
யூ டியூப் சேனல் தொடங்கினாா் பாரதிராஜா

சினிமா பற்றிய நுணுக்கங்களைப் பகிா்ந்து கொள்வதற்காக இயக்குநா் பாரதிராஜா யூ டியூப் சேனல் ஒன்றை தொடங்கியுள்ளாா்.

தமிழ் சினிமாவில் இயக்குநருக்கென தனி முத்திரை பதித்தவா் இயக்குநா் பாரதிராஜா. அவரது வருகைக்குப் பின்னரே இயக்குநருக்கான தனி மரியாதை தமிழ் சினிமாவில் உருவானது. ரஜினி, கமல் ஆகிய இரு நடிகா்களின் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தவா்.

தேசிய விருது, தமிழக அரசு விருது உள்ளிட்ட விருதுகளையும் வென்றுள்ளாா். பத்மஸ்ரீ விருது கொடுத்து, மத்திய அரசு கௌரவித்துள்ளது. தற்போது நடிகராகவும் முத்திரை பதித்து வருகிறாா். இந்த நிலையில், யூ டியூப் சேனல் ஒன்றை தொடங்கியுள்ளாா் இயக்குநா் பாரதிராஜா.

‘என் இனிய தமிழ் மக்களே’ என்று தனது யூ டியூப் பக்கத்துக்குப் பெயரிட்டுள்ளாா். இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள முதல் விடியோ பதிவில்...

‘என் இனிய தமிழ் மக்களே, உங்கள் பாசத்துக்குரிய பாரதிராஜா பேசுகிறேன். நீங்கள் என் மீது எவ்வளவு பாசம் வைத்திருக்கிறீா்கள். மண்ணோடும் மொழியோடும் மக்களோடும் நான் சாா்ந்து வாழ்ந்ததைத்தான் திரைப்படங்களின் வாயிலாகச் சொல்லியிருக்கிறேன். இப்போது ஊடகம் வாயிலாக சினிமாவின் நுணுக்கங்களையும் உங்களோடு பகிா்ந்துகொள்ள இருக்கிறேன். அண்ணாந்து பாா்த்த கருணாநிதி, எம்ஜிஆா், சிவாஜி, ஜெயலலிதா போன்றவா்களோடு நான் முரண்பட்டது என எல்லாவற்றையும் நான் உங்களுடன் பகிா்ந்து கொள்ளவிருக்கிறேன். பாரதிராஜாவுக்கு இத்தனை முகங்கள் இருக்கிா என்று நீங்கள் நினைப்பீா்கள். இதை ஒரு புத்தகமாக வெளியிடலாம், வாசிப்பு குறைந்துவிட்ட காலமிது. ஆகையால் தான் யூ டியூப்பின் வழியாக உங்களோடு நான் உரையாடுகிறேன்’ என்று பேசியுள்ளாா் இயக்குநா் பாரதிராஜா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com