Enable Javscript for better performance
bigg boss season 3 title winner mugen roa interview | முகேன் ராவின் அடுத்த ப்ளான் இதுதான்!- Dinamani

சுடச்சுட

  

  பிக் பாஸ் வெற்றிக்கு பின் முகேன் ராவின் அடுத்த ப்ளான் இதுதான்!

  By Uma Shakthi  |   Published on : 11th October 2019 04:16 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  mugen

  பிக் பாஸ் சீஸன் 3 டைட்டில் வின்னரான முகேன் ராவ் சமீபத்தில் சினிமா எக்ஸ்ப்ரஸுக்கு அளித்த பேட்டியில் சில துளிகள்

  105 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்துவிட்டு, வெளியே வந்த உடன் முதல்ல என்ன செஞ்சீங்க?

  முதல்ல ஃபோனைத் தேடினேன். ஃபேமிலி மெம்பர்ஸ் எல்லோருக்கும் பேசினேன். நல்ல ரெஸ்ட் எடுக்கணும்னு நினைச்சேன், எடுத்துட்டு இருக்கேன்.

  சோஷியல் மீடியா ரெஸ்பான்ஸ்?

  மக்களுக்கு நான் நன்றி சொல்லணும். முக்கியமா மலேஷியா மக்களுக்கு. அவங்கதான் இவ்வளவு தூரம் வரதுக்கு சப்போர்ட் பண்ணாங்க. இங்க இந்த அளவுக்கு சப்போர்ட் கிடைக்கும்னு நானே எதிர்பார்க்கலை. இவ்வளவு அன்பு கொடுப்பாங்கன்னு நினைக்கலை. உண்மையிலேயே ஆசிர்வதிக்கப்பட்டிருக்கேன்.

  ஃபைனல்ஸ் வரைக்கும் போவீங்கன்னு நினைச்சீங்களா?

  சில சமயம் போயிடலாமான்னு நினைச்சிருக்கேன். ஆனா முயற்சியை கைவிடக் கூடாதுன்னு உறுதியா இருந்தேன். நிறைய யோசிக்க நேரம் இருந்தது. அப்ப முடிவு எடுத்ததுதான், முயற்சியை கையில் எடுத்தா யாரா இருந்தாலும் வெற்றி பெறலாம். 

  மிடில் பென்ச் முன்னாடி வாங்கன்னு சொன்னது ஏன்?

  கடைசி பென்ச்ல உட்கார்ந்திருந்தேன். நான் கைவினை பொருட்கள் எல்லாம் செய்வேன். முதல்ல பயம் இருந்துச்சு. அதிகமா யார்கிட்டயும் பழகினதில்லை. சின்ன குளத்துல இருக்கற மீனை எடுத்து கடல்ல போட்டா எப்படி இருக்கும். அப்படித்தான் இருந்தது எனக்கு. நிறைய கத்துக்கணும்னு தோணுச்சு. கைவினை பொருட்கள் தவிர என்னோட ப்ளஸ் என்னன்னு புரிஞ்சிக்கிட்டேன். நானே ஒரு ஆடியன்ஸா இருந்தா எதிர்ப்பார்ப்பேன் இல்லையா..அதுக்கப்பறம் நிறைய பங்கேற்க ஆரம்பிச்சேன்.

  இதுக்கு முன்னால பிக் பாஸ் நிகழ்ச்சி பார்த்திருக்கீங்களா?

  முதல் சீஸன் பார்த்தேன், ரெண்டாவது பாக்கலை. 

  அடுத்து உங்க ப்ளான் என்ன?

  எனக்கு திட்டம் போடத் தெரியலை. எல்லாருமே எப்பவும் சொல்வாங்க நீ நீயாக இருன்னு. உண்மையா இருக்கறதுதான் நல்லது. ஒரு ஆள் ரொம்ப நாள் நடிக்க முடியாது இல்லையா?

  பிக் பாஸ்ல நியூட்ரலா, நடு நிலைல இருக்கறது கஷ்டமா?

  நான் நிறைய சண்டை போடறவன்தான். ஆனால் இங்க எல்லாருமே தெரிஞ்சவங்க. எல்லாமே அண்ணனா என்னோட மனசுக்கு கனெக்ட் ஆனவங்க. அப்படியிருக்கும் போது ரெண்டு பேருக்குள்ள சண்டைன்னா, அவங்க உட்கார்ந்து பேசினா பிரச்னை முடியும். மூணாவதா ஒருத்தர் வந்தா, அது அதிகமாகும். ஆனா யோசிக்கறப்ப சில இடங்கள்ல நாம போய் கலந்திருக்கலாம்னு தோணிச்சு. 

  பிக் பாஸ்ல பர்சனல் ஸ்பேஸ்?

  ஒருத்தர் நம்மகிட்ட விஷயங்கள் சொல்றாங்க. அதுல நல்லதும் இருக்கும் கெட்டதும் இருக்கும். எது தேவையோ அதை எடுத்துக்கணும். உள்ள போகறதுக்கு முன்னால நிறைய கோபப்பட்டிருக்கேன். அதை மாத்த நினைச்சேன். தவறுகள்லேருந்துதான் நாம கத்துக்க முடியும். தவறு செய்யுங்க. பிரச்னையில்லை. ஆனால் கத்துக்கிட்டு மீண்டு வாங்க. 

  எல்லார் கூடவும் ப்ரிண்டிலியா இருந்தீங்க. எவிக்‌ஷன் ப்ராஸஸ் எப்படி இருந்துச்சு?

  ரொம்ப கஷ்டமா இருக்கும். எண்ட் ஆஃப் தி டே இது ஒரு கேம் ஷோ. மச்சான் உன்ன நாமினேட் பண்ணிட்டேண்டா என்று தர்ஷனிடம் சொல்வேன். அவனும் ஆமா உன்னை நான் நாமினேட் பண்ணிட்டேன்னு சொல்லி சிரிச்சுப்போம். வேற வழி இல்லை கேம் ஷோ பண்ணித்தான் ஆகணும். 

  நான் பாசிட்டிவான ஆள். செல்ஃபை தாழ்த்திக்கறது நெகடிவான விஷயம். தர்ஷனை பாக்கறப்ப நிறைய மோடிவிசேஷன் கிடைச்சது. கடைசி 50 நாட்கள்ல நான் இங்கிருந்து போக மாட்டேன்னு சொன்னது என்ன தைரியத்துல சொன்னேன்னு தெரியலை. ஒரு இண்ட்யூஷன்ல சொன்னேன், அந்த நம்பிக்கை நல்லா இருந்துச்சு. அதைப் பார்த்து நானே ரசிச்சேன்.

  குரூப்பிஸம்னு சொன்னாங்களே அதை எப்படி பாக்கறீங்க?

  க்ரூப்பா ஃபார்ம் ஆனா அது க்ரூப்பிஸம்தானே. ஒரு ஆள் இருந்தா ஒரு ஆள். ரெண்டு பேர் சேர்ந்தா அது க்ரூப்தான். சிம்பிள் எண்ட் ஆப் தி டே பதினாரு பேரும் ரைட். ஆனா எந்தக் கோணத்துல பாக்கறோம்ங்கறதுல தான் இருக்கு.

  யாரு ஜெயிச்சாலும் ஓகேன்னு இருந்துச்சா. எந்த பாயிண்ட்ல அவ்ளோ திக் ஆனது?

  நாங்க கனெக்ட் ஆனோம். ஆளு குறைய குறைய. யார் ஜெயிச்சாலும் சந்தோஷப்பட்டிருப்பேன். தர்ஷன், கப்போட உள்ள இருக்கற அனுபவம் இதுதான் மிகப் பெரிய பரிசு. கப் ஒரு அடையாளம். இது வரைக்கும் ஓகே. இதுக்கப்பறம்தான் லைஃப்.

  பிக் பாஸ் வீட்டுல இருந்த தினங்களை இப்ப திரும்பி பாக்கறப்போ, ஏதாவது மாற்றம் செஞ்சிருக்கலாம்னு தோணுதா?

  இல்லை அப்படி எனக்கு எதுவும் தோணலை. அது முடிஞ்சு போன விஷயம். மறுபடியும் அதை நான் விடியோவில கூட பாக்க மாட்டேன். அடுத்து என்னன்னுதான் யோசிப்பேன். உள்ளே இருந்த அதே முகேன் தான் வெளியேயும். என்னோட விருப்பம் என்னன்னா, நான் இன்ஸைபயர் ஆகி மத்தவங்களையும் இன்ஸபையர் பண்ணனும்.

  உங்க மியூசிக் டாலண்ட் பத்தி சொல்லுங்க...அடுத்து என்ன?

  எனக்கு பாடறது பிடிக்கும். நடிக்கறதும் பிடிக்கும். எல்லாரும் வாய்ப்புக்காகத்தானே ஏங்கறோம். இதன் மூலம் கிடைக்க போகும் வாய்ப்புக்கள்தான் முக்கியம். அதுக்கேத்த மாதிரிதான் ப்ளான் பண்ணனும். நடிக்க வாய்ப்பு கிடைச்சாலும், ம்யூசிக்கை விட மாட்டேன். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai