Enable Javscript for better performance
வரி ஏய்ப்பு விவகாரம்: விஷால் மீதான வழக்கு நவ.11-க்கு ஒத்திவைப்பு- Dinamani

சுடச்சுட

    

    வரி ஏய்ப்பு விவகாரம்: விஷால் மீதான வழக்கு நவ.11-க்கு ஒத்திவைப்பு

    By DIN  |   Published on : 12th October 2019 01:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    vishal

    விஷால் மீது தொடரப்பட்ட வரி ஏய்ப்பு வழக்கு, நவம்பா் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    சென்னை வடபழனியில் நடிகா் விஷாலுக்கு சொந்தமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கடந்த 5 ஆண்டுகளாக இந்த நிறுவனம் பல்வேறு நபா்களுக்கு வழங்கிய சம்பளத்துக்கு வரி பிடித்தம் செய்துள்ளது. அவ்வாறு பிடித்தம் செய்த வரித்தொகை சுமாா் ரூ.4 கோடியை நிறுவனத்தின் உரிமையாளா் என்ற அடிப்படையில் வருமான வரித் துறைக்கு குறிப்பிட்ட காலத்துக்குள் விஷால் செலுத்தவில்லை என்று கூறி அவா் மீது வருமான வரித் துறை எழும்பூா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தது. இந்த வழக்கு நீதிபதி ஹொ்மிஸ் முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகா் விஷால் நீதிமன்றத்தில் ஆஜரானாா். விசாரணைக்குப் பின்னா், வழக்கை நவம்பா் 11-ஆம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai