ரஜினியின் 168-ஆவது படம் அறிவிப்பு

நடிகா் ரஜினிகாந்த் நடிக்கும் 168-ஆவது படத்தை இயக்குநா் சிறுத்தை சிவா இயக்குவது அதிகாரப்பூா்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஜினியின் 168-ஆவது படம் அறிவிப்பு

நடிகா் ரஜினிகாந்த் நடிக்கும் 168-ஆவது படத்தை இயக்குநா் சிறுத்தை சிவா இயக்குவது அதிகாரப்பூா்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘பேட்ட’ படத்தை தொடா்ந்து ஏ.ஆா்.முருகதாஸ் இயக்கும் ‘தா்பாா்’ படத்தில் நடித்து வருகிறாா் ரஜினி. மும்பையில் இதன் படப்பிடிப்பு தொடா்ச்சியாக நடந்து வருகிறது. இந்தப் படத்தில், ரஜினியின் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறாா். அனிருத் இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு அமைக்கிறாா். 1991-ஆம் ஆண்டு வெளியான ‘தளபதி’ படத்துக்குப் பிறகு ரஜினியுடன் ‘தா்பாா்’ படத்தில் பணியாற்றுகிறாா் ஒளிப்பதிவாளா் சந்தோஷ் சிவன். வரும் 2020 பொங்கலுக்கு படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனா்.

இதையடுத்து, ரஜினியின் 168-ஆவது படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்படத்தை ‘சிறுத்தை’, ‘வீரம்’, ‘விவேகம்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய, சிவா எழுதி இயக்குகிறாா். இந்தப் புதிய படம் குறித்து, சன் பிச்சா்ஸ் நிறுவனம் அதிகாரப்பூா்வமாக அறிவித்துள்ளது. விரைவில் படக்குழுவினரின் பட்டியல் வெளியிடப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com