Enable Javscript for better performance
Bigil Maathare Lyric Video released | பிகில் படத்தின் மாதரே பாடல் லிரிக் விடியோ வெளியானது- Dinamani

சுடச்சுட

  

  விஜய் நடிக்கும் பிகில் படத்தின் மாதரே பாடல் லிரிக் விடியோ வெளியானது

  By Uma Shakthi  |   Published on : 22nd October 2019 01:41 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  bigil_2cc

  'தெறி', 'மெர்சல்' படங்களைத் தொடர்ந்து, 'பிகில்' படத்தின் மூலம் மூன்றாவது முறையாக இணைகிறது விஜய் - அட்லி கூட்டணி. இந்தப் படத்தை ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. வழக்கமாக படத்தை பிசினஸ் செய்யும் போது இந்த ஏரியாவை எவ்வளவுக்கு விற்க வேண்டும், அந்த ஏரியாவை எவ்வளவுக்கு விற்கலாம் என்று பெரிய பரபரப்பு இருக்கும். ஆனால், 'பிகில்' படத்தில் அந்த டென்ஷன் இல்லை. பலபேர் போட்டி போட்டு, "நாங்க வாங்கிக்கிறோம்' என்று முன்வந்தார்கள். இதுவே எங்களுக்குப் பெரிய பெருமை என்கிறது தயாரிப்பாளர் தரப்பு.

  நயன்தாரா, ஜாக்கி ஷெராப், கதிர், விவேக், யோகி பாபு, டேனியல் பாலாஜி, இந்துஜா என பெரிய நட்சத்திர பட்டாளமே படத்தில் உண்டு. படத்தின் கதை கால்பந்து விளையாட்டை பற்றியது. கால்பந்தின் பரிச்சயம் இங்கே பெரிதாக இல்லாததால், அதை உணர்வூப்பூர்வமாக காட்ட வேண்டிய நிர்பந்தம் படக்குழுவுக்கு. இதற்காக ஹாலிவுட்டில் வெளிவந்த 'பீலே' படத்தின் தொழில்நுட்பக் குழு இந்தப் படத்துக்காக பணியாற்றியுள்ளது.

  நயன்தாராவின் கதாபாத்திரமும் புதுமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.  இந்தப் படத்தில் அவர் ஸ்போர்ட்ஸ் பிஸியோதெரபிஸ்டாக நடிக்கிறார். நயன்தாராவின் ஆடை வடிவமைப்பளாராக அனுவர்தன் பணியாற்றியுள்ளார்.

  ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்துக்கு, 'மெர்சல்' படத்தில் பணியாற்றிய கே.ஜி.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். படத்தில் விஜய் - நயன்தாரா ஜோடி போல் இன்னொரு ஜோடி உண்டு. கதிருக்கு ஜோடியாக 'ஜருகண்டி' படத்தில் நடித்த ரெபா மோனிகா நடிக்கிறார்.

  வழக்கமாக பல கதைகள் தயாரிப்பு தரப்பில் கேட்கப்பட்டது. அரசியல் சாயம் இல்லாத ஒரு படம் வேண்டும் என்பதுதான் ஏஜிஎஸ் தரப்பின் முக்கிய நிபந்தனை. அதற்கேற்ப 'கில்லி', "போக்கிரி' மாதிரியான திரைக்கதை வடிவமைப்பு பற்றி பேசப்பட்டது. அப்போதுதான் இந்த கால்பந்து கதை பற்றி பேசப்பட்டது. இதுவரை விஜய் கால்பந்து வீரராக நடித்ததில்லை. அதுவே புதிது என்பதால் கதை வளர்ந்தது. மட்டுல்லாமல் பெண்களை போற்றும் விதமான கதைக் கரு இதன் இன்னொரு சிறப்பு.

  நள்ளிரவு 2 மணிக்கு படப்பிடிப்பு முடிந்தாலும், மறுநாள் காலையில 7 மணிக்கு வந்து கால்பந்து பயிற்சி எடுத்திருக்கிறார் விஜய். விளையாட்டு பற்றி கதை என்பதால் விஜய்க்கு திருப்தி இருந்தால் மட்டுமே, அந்த காட்சி தீர்மானமாக முடியும். இதற்காக நிறைய 'ரீடேக் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளது. அதை விட உணர்வுப்பூர்வமான காட்சிகளில் விஜய் வேறு விதமாக நடித்திருக்கிறார் என்கிறது படக்குழு.

  கடந்த வாரம் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வைரலான நிலையில் தற்போது 'மாதரே மாதரே’ என்ற பாடல் லிரிக் விடியோ வெளியானது

  மார்பகம் போல என் மனத்துக்கு ஒரு முகம் இருந்திருந்தால்தான் ஆணினம் பார்த்திடும் அதையும்,  வலிமை வரம் எனவே மீசையை ஏற்றுகிறார், ஆண்மை அது மீசை முடி ஓரத்திலே பூப்பதில்லை, பெண்ணை நீ கண்ணியமாய் பார்ப்பதிலே துளிர்கும் போன்ற வலிமையான வரிகளை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார்.

  படம் தீபாவளிக்கு இரண்டு நாட்கள் முன்னதாக அதாவது, அக்டோபர் 25-ம் தேதி வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் இணையத்தில் கவனம் பெற்று வரும் நிலையில், தற்போது சின்மயி குரலில் மாதரே...மாதரே பாடலின் லிரிக்கல் விடியோ வெளியாகியுள்ளது.

  ரசிகர்கள் பிகில் தீபாவளியை எதிர்நோக்கி ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

   

  TAGS
  Bigil
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai