'விக்ரம் 58' படத்தில் அறிமுகமாகும் கிரிக்கெட் வீரர் இவர்தான்!

'டிமான்டி காலனி', 'இமைக்கா நொடிகள்' படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்கவுள்ள படத்துக்கான புது அறிவிப்பு வெளிவந்துள்ளது
'விக்ரம் 58' படத்தில் அறிமுகமாகும் கிரிக்கெட் வீரர் இவர்தான்!

'டிமான்டி காலனி', 'இமைக்கா நொடிகள்' படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்கவுள்ள படத்துக்கான புது அறிவிப்பு வெளிவந்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ஒரு முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க உள்ளார்.அவர் இப்படத்தில் நடிக்க இருக்கும் செய்தியைப் படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர். 'விக்ரம் 58' என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் மூலம் இர்பான் பத்தான் தனது திரையுலகப் பயணத்தைத் தொடங்க உள்ளார்.

2006- ஆம் ஆண்டு லாகூரில் நடந்த ஒரு டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்களை வீழ்த்தி, ஹாட்ரிக் எடுத்து சாதனை புரிந்தவர் இர்பான். தயாரிப்பாளர் லலித் குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. பல வெளிநாடுகளிலும் இந்தியாவின் பல இடங்களிலும் படமாக்கப்பட உள்ளது. 

**

மைனா', "சாட்டை', 'மொசக்குட்டி' உள்ளிட்ட படங்களைத் தயாரித்த ஷாலோம் ஸ்டூடியோஸ் அடுத்து தயாரித்து வரும் படம் 'சம்பவம்'. ஸ்ரீகாந்த் மற்றும் நடன இயக்குநர் தினேஷ் இருவரும் இணைந்து நடிக்கின்றனர். 

பூர்ணா, சிருஷ்டி டாங்கே இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். 'பக்ரீத்' படத்தில் நடித்த பேபி ஸ்ருதிகா, கிஷோர், இயக்குநர் ஏ.வெங்கடேஷ், தம்பி ராமையா, 'நான் கடவுள்' ராஜேந்திரன், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் கதையின் பிரதான கதாபாத்திரங்களை ஏற்கின்றனர். மனசாட்சிக்கு உட்பட்டு நேர்மையுடன் வாழும் ஒருவன், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் நேர்மைக்குப் புறம்பாக தள்ளப்படும் போது ஏற்படும் பிரச்னைகளை மையப்படுத்தி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. அண்மையில் நடந்த சில உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து கதை எழுதப்பட்டுள்ளது. 

இப்படத்தை இயக்குநர் ஏ.வெங்கடேஷிடம் உதவி இயக்குநராக இருந்த ரஞ்சித் பாரிஜாதம் எழுதி இயக்குகிறார். அம்ரிஷ் இசையமைக்கிறார். முத்து கே.குமரன் ஒளிப்பதிவு செய்கிறார். கோபி கிருஷ்ணா படத்தொகுப்பை கவனிக்கிறார். இப்படத்தின் தொடக்க விழா அண்மையில் சென்னையில் நடந்தது. 

**

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com