ஹீரோயினுக்கு அதிக முக்கியத்துவம் கொண்ட கதைகளில் நடித்து வருகிறேன்

நயன்தாரா, த்ரிஷா, அனுஷ்கா பாணியில் தன்னை முன்னிலைப்படுத்தும் படங்களைத் தேர்வு செய்கிறார் தமன்னா.
Tamannah
Tamannah

நயன்தாரா, த்ரிஷா, அனுஷ்கா பாணியில் தன்னை முன்னிலைப்படுத்தும் படங்களைத் தேர்வு செய்கிறார் தமன்னா. ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில் தற்போது வந்துள்ள 'பெட்ரோமாக்ஸ்' படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படம் சம்பந்தமான நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னை வந்திருந்தார் தமன்னா. 

அப்போது பேசும் போது, 'தேவி, தேவி 2 ஆகிய படங்களுக்கு பிறகு நான் நடித்துள்ள பேய் கதை இது. வழக்கமாக மற்ற படங்களில் பேயைக் கண்டு மனிதர்கள் பயப்படுவார்கள். இதில் அதுவும் இருக்கும். அதை விட, மனிதர்களைப் பார்த்து பேய்கள் பயப்படுவதையும் காட்டியிருக்கிறார்கள்.

சமீபகாலமாக ஹீரோயினுக்கு அதிக முக்கியத்துவம் கொண்ட கதைகளில் நடித்து வருகிறேன். 'பெட்ரோமாக்ஸ்' படம், என் சினிமாப் பயணத்தில் அடுத்த கட்டமாக இருக்கும். அடுத்து விஷாலுடன் ஆக்ஷன், ஹிந்தி 'குயின்' படம் தெலுங்கில் 'தட் இஸ் மகாலட்சுமி' என்ற பெயரில் ரீமேக் ஆகியுள்ளது.

திருமணம் குறித்து நிறைய தகவல்கள் வெளியாகின்றன. அதில் ஒரு சதவிகிதம் கூட உண்மை கிடையாது. சிலர் வேண்டுமென்றே கற்பனையாக எழுதுகிறார்கள். அவர்களுக்குப் பதில் சொல்வது சரியாக இருக்காது என்று நினைக்கிறேன்' என்று தெரிவித்தார். 

**

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com