நயன்தாராவுக்கு முதன்முதலாக ‘லேடி சூப்பர் ஸ்டார்’ பட்டம் கொடுத்தது யாரு?!

அப்போது ராஜா ராணி திரைப்படத்துக்காக காஃபீ வித் டிடி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சம்மதித்தார் நயன். அந்த சந்திப்பில் தான்
நயன்தாராவுக்கு முதன்முதலாக ‘லேடி சூப்பர் ஸ்டார்’ பட்டம் கொடுத்தது யாரு?!

டிடி அலைஸ் திவ்யதர்ஷினியின் நேர்காணல் ஒன்றைக் காண நேர்ந்தது. அதில் டிடி பகிருந்து ஒரு விஷயம் எனக்குப் புதுசு. ஆம், இன்று கோலிவுட், டோலிவுட், மல்லுவுட், சாண்டல்வுட் என எல்லாத்திக்கிலும் நயன் தாராவை லேடி சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடிக் கொண்டிருக்கிறது தென்னிந்திய திரையுலகம். இந்தப் பட்டத்தை இவருக்கு அளித்தது யார்? சூப்பர் ஸ்டாருக்கு அந்தப் பட்டத்தைக் கொடுத்தது வசனகர்த்தா கலைப்புலி எஸ் தாணு என்பார்கள். அதே போல நயன்தாராவுக்கு லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் எப்படி வந்தது தெரியுமா? அதைக் கொடுத்தது காஃபீ வித் டிடி தானாம். இதை அவரே சமீபத்திய தனது நேர்காணல் ஒன்றில் பகிர்ந்திருக்கிறார். 

தமிழில் ‘ஐயா’ திரைப்படம் மூலமாக அறிமுகமான நயன்தாரா.. பிறகு சூப்பர் ஸ்டாரின் சந்திரமுகி, சிம்புவின் வல்லவன், ஏ ஆர் முருகதாஸின் கஜினி என தமிழ் சினிமாவிலும் தெலுங்கில் நாகார்ஜுனா, வெங்கடேஷ், நந்தமூரி பாலகிருஷ்ணா, பிரபாஸ், மகேஷ் பாபு எனப் பல முன்னணி நடிகர்களோடும் ஜோடியாக நடித்துப் புகழேணியின் உச்சியில் ஏறிக்கொண்டிருந்தார். தென்னிந்திய சினிமாக்களில் சில காலம் நயன் தாராவின் கொடி ஓஹோவெனப் பறந்தது. பிறகு சிம்புவுடன் காதல் எனச் சில காலத்தை வீணடித்தார். அந்தக் காதல் ஒன்றுமில்லாமல் நசிய, பிறகு மீண்டும் சிவாஜி திரைப்படத்தில் ரஜினியுடன் ஒற்றைப் பாடலுக்கு நடனமாடினார். பிறகு பார்த்தால் திடீரென ஒரு நாள் பிரவு தேவாவுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார். இருவரும் இணைந்து திரைப்பட விழாக்களில் பங்கேற்கத் தொடங்கினர். தெலுங்கில் என் டி பாலகிருஷ்ணாவுடன் இணைந்து ‘ராம ராஜ்ஜியம்’ திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது, படப்பிடிப்பின் இறுதி நாளன்று, இனிமேல் தான் சினிமாவுக்கு முழுக்குப் போடவிருப்பதாகவும், திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்வில் ஆழ்ந்திருக்கப் போவதாகவும் சொல்லி மூத்த தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்களிடம் ஆசி பெற்ற காட்சிகள் ஊடகங்களில் ஒளிபரப்பாகின. ஆனால், அந்த உறவும் முடிவுக்கு வந்தது. பிரபுதேவா, தனது மூத்த மகனின் இறப்புக்குப் பின் நயன் தாராவுடனான உறவைப் பேணவில்லை. என்ன காரணத்தாலோ இவர்கள் பிரிந்து விட்டார்கள். நயனுக்கு புதிய சினிமா வாய்ப்புகளும் அப்போது பெரிதாக இல்லாதிருந்தது. உடனே நயன் தாரா அவ்வளவு தான். இனிமேல் அவருக்கு மார்கெட் இல்லை. அவருக்கு இனி பட வாய்ப்புகள் குறைந்து விடும் என்று தான் பலரும் நினைத்தார்கள். ஆனால், நடந்தது வேறு. 

மிகக்குறுகிய காலமே நயன்தாரா சினிமாவை விட்டு விலகி இருந்தார். சீக்கிரமே அடுத்த ரவுண்டு தொடங்கியது.

ராஜா ராணி, யாரடீ நீ மோகினி, நானும் ரெளடி தான், தனி ஒருவன், மாயா, டோரா  என்று ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாகத் தேர்ந்தெடுத்து நடித்துப் பட்டையைக் கிளப்பத் தொடங்கினார் நயன்தாரா. அப்போது ராஜா ராணி திரைப்படத்துக்காக காஃபீ வித் டிடி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சம்மதித்தார் நயன். அந்த சந்திப்பில் தான் நயன் தாராவின் கை பிடித்து அவரை லேடி சூப்பர் ஸ்டார் என்று தான் வாழ்த்தியதாகத் தெரிவித்தார் டிடி.

அப்போ டிடி தான் நயனுக்கு லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்தார்ங்கறது சரி தானே! இதை நயன் தாராகூட ஏதோ ஒரு சந்திப்பின் போது டிடியிடம், ‘ஏய் நீதானே என்னை முதல்ல அப்படிக் கூப்பிடத் தொடங்கின’ என்று சந்தோஷமாக நினைவுகூர்ந்தாராம்.

சரி தான்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com