சுடச்சுட

  

  சைக்கோ படத்தின் ஒளிப்பதிவாளராக இவருடைய பெயர் தான் இருக்கும்: பி.சி. ஸ்ரீராம் தகவல்

  By எழில்  |   Published on : 11th September 2019 01:57 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  psycho1

   

  உடல்நிலை காரணமாக மிஷ்கின் இயக்கி வரும் சைக்கோ படத்தில் தன்னால் பணியாற்ற முடியவில்லை என பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.

  இதுகுறித்து ட்விட்டரில் அவர் கூறியதாவது:

  தன்வீருக்கு வாழ்த்துகள். அலர்ஜி பிரச்னை காரணமாக என்னால் சைக்கோ படத்தில் பணியாற்ற முடியாததை மிஷ்கின் புரிந்துகொண்டார். தன்வீர் மிர், படத்தின் 99% காட்சிகளுக்கு நீ தான் ஒளிப்பதிவு செய்தாய். எனவே ஒளிப்பதிவாளராக உன் பெயரே குறிப்பிடப்படும். உன்னுடைய பணிகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்படும். தன்வீரை எண்ணி காஷ்மீர் பெருமை கொள்ளும் என்று ட்வீட் செய்துள்ளார். 

  மிஷ்கின் தற்போது இயக்கி வரும் சைக்கோ படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்துள்ளார். உதயநிதி, அதிதி ராவ், நித்யா மேனன், ராம் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இசை - இளையராஜா. 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai