சுடச்சுட

  

  ஆன்லைன் சினிமா கட்டணத்தில் மாற்றம்: அமைச்சர் கடம்பூர் ராஜு

  By எழில்  |   Published on : 13th September 2019 11:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  theatre8171

   

  எத்தனை சினிமா டிக்கெட் முன்பதிவு செய்தாலும் ஒரு டிக்கெட்டுக்கான சேவைக்கட்டணம் மட்டுமே வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். 

  திரையரங்குகளில் சினிமா பார்ப்பதற்கு ஆன்-லைனில் மட்டுமே டிக்கெட் விற்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு சமீபத்தில் அறிவித்தார். தமிழகத்திலுள்ள 977 திரையரங்குகளிலும் எத்தனை டிக்கெட்டுகள் விற்கின்றன என்பதை அறிந்து கொள்ளும் விதமாக முதன் முறையாக இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளோம் என்று அவர் கூறினார்.

  இந்நிலையில், விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு இன்று தெரிவித்ததாவது: எத்தனை சினிமா டிக்கெட் முன்பதிவு செய்தாலும் ஒரு டிக்கெட்டுக்கான சேவைக்கட்டணம் மட்டுமே வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இம்மாத இறுதிக்குள் அனைத்து சினிமா டிக்கெட்டுகளும் ஆன்லைனில் கிடைக்கும்படி வழிவகை செய்யப்படும் என்று கூறியுள்ளார். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai