'நான் தமிழன் இல்லையென்றால் யாரும் தமிழனே இல்லை!' ரங்கராஜ் பாண்டே பேச்சு!

NS IAS Academy சார்பாக அச்சம் தவிர் என்ற தலைப்பில் சிறப்பு விருந்தினராக ஆர்.ரங்கராஜ் பாண்டே
'நான் தமிழன் இல்லையென்றால் யாரும் தமிழனே இல்லை!' ரங்கராஜ் பாண்டே பேச்சு!


NS IAS Academy சார்பாக சிறப்பு விருந்தினராக ஆர்.ரங்கராஜ் பாண்டே பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் அச்சம் தவிர் என்ற தலைப்பில் அவர் பேசியதிலிருந்து சில துளிகள்:

'நான் வேலைக்கு சேர்வதற்கு முன் ரெண்டு கண்டிஷன் போட்டாங்க. அதுல ஒண்ணு தாடியை எடுத்திடணும். ப்ரென்ச் தாடி வைச்சிருந்தேன். நல்ல சம்பளம் கொடுத்தா குட்டிக்கரணம் கூட அடிப்பேன்னு நினைச்சிட்டு, அந்தக் குறுந்தாடியை எடுத்தேன். அப்பறம் பாத்தா பைக்ல போகறப்ப நாடியில் காத்து நல்லா படுது. இடையில தாடி இருக்கறதால அதுக்கு முன்னாடி காத்து படாது.

ஸ்டுயோவைத் தவிர, நான் வெளியில் எங்கும் கோட் போடறது இல்லை. சானல்ல பெரும்பாலும் ப்ளேஸர்தான் போடறாங்க. அதைவிடக் கொடுமை அந்தக் டையைக் கட்டறதுதான். எனக்கு வேற அதை சரியா கட்ட வராது. யார்கிட்டயாவது கெஞ்சிட்டிருப்பேன். டையைக் கட்டி விடுங்கடான்னு. அதுக்கப்புறம் தான் கெட்டப் மாத்தினேன்.

ஆண்களை விட அதிகமாக இருக்கும் பெண் சிங்களுக்கு என் வாழ்த்துக்கள். பெண்களை உட்கார வைத்து வெளியில் நின்று கொண்டிருக்கும் ஆண் சிங்கங்களுக்கும் வாழ்த்துக்கள். 

நான் பல இடங்களில் சொல்லி இருக்கிறேன். பெண் பிள்ளைகள் எப்பவுமே எனக்கு ஒரு ஆச்சரியம். தினமும் வீட்டில் அவ்வளவு வேலை செய்வாங்க. தன் சகோதரனுக்குத் தேவையான எல்லா வேலைகளையும் பார்த்துட்டு பள்ளிக்கு போவாங்க, திருமணம் முடிந்த பிறகு கணவனுக்காக வேலை பார்த்துவிட்டு அதுக்கப்பறமா வேலைக்குப் போய் அங்கேயும் வேலை. எல்லாத்தையும் கவனிக்கக் கூடிய பொறுமை அவங்ககிட்ட மட்டும்தான் இருக்கும். இதை எல்லாம் விடுங்க, பத்து மாசம் குழந்தையை சுமந்து பெத்துக்கறது என்ன சாதாரண விஷயமா. ஆண்கள்கிட்ட கடவுள் இதை பகிர்ந்துக்கங்கன்னு விட்டா, ஆண்களால ஒரு மாசமாவது பொறுமையா இருக்க முடியுமா? நிச்சயம் முடியாது.

அதோட இன்னொரு விஷயம் பெண்களிடம் இருக்கும் மனவலிமை ஆண்களிடம் கிடையாது. பெண்களுக்கு வலியைத் தாங்கும் இயல்பு உள்ளது. இயற்கையிலேயே உறுதியானவர்கள் அவர்கள். அரசியல் பெண் தலைவர்களுக்கு இருக்கும் will power எந்த ஆணுக்கும் வராது. தனியாக வாழ்க்கையில் வெற்றி பெற விரும்பும் பெண்கள் விஸ்வரூபம் எடுத்துவிடுவார்கள். அவர்களுக்கு முன் எந்த ஆணும் நிற்க முடியாது.

பெண்கள் அரசுப் பணிக்கு வந்தால் நிச்சயம் நாடு உருப்படும். பெண்களிடம் இருக்கும் ஒரே பிரச்னை புறம் பேசுவது. அதுவும் பெரிய குறை எல்லாம் கிடையாது. ஐடி கம்பெனிகளில் பெண்கள் அதிக சதவிகிதம் வேலை பார்க்கிறார்கள்.

நான் தமிழன் இல்லைன்னு சிலர் சொல்றாங்க. நான் தமிழன் இல்லையென்றால் யாரும் தமிழனே இல்லை. எனக்குத் தமிழ்தான் தெரியும். ஹிந்தி 'தோடா தோடா’தான். இங்கலீஷ் கூட 'yes' 'No'-ன்னு குறைந்த வார்த்தைகள்தான். நான் படித்தது தமிழ், சுவாசித்துக் கொண்டிருப்பது  தமிழ்தான். இன்னொரு விஷயம் தெரியுமா உங்களுக்கு? தமிழ்நாட்டில் 40 சதவிகிதம் தமிழர் அல்லாதவர்கள்தான். இப்படி என்னிடம் சொல்லியவர்  ஒரு தெலுங்கர். 

யார் யாரை எல்லாம் தமிழர் இல்லை என்று சொல்கிறோமா அவர்களைத்தான் முதல் அமைச்சர் ஆக்கிவிடுவார்கள் நம் மக்கள். (பயப்படாதீங்க, எனக்கு அப்படி ஒரு அபிப்ராயம் இல்லை) தமிழக மக்கள் தங்களோட இதயத்துக்கு நெருக்கமாக யாரை உணர்ந்தாலும் அவர்களை அப்படியே ஏத்துப்பாங்க/ சக ஹிருதயர்களாக்கிக் கொள்வார்கள். அதனாலத்தான் இங்க வாழ வந்தவங்களுக்குத் தொடர்ந்து வாய்ப்பும் வளர்ச்சியும் சாத்தியமாகி இருக்கு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com