அன்று சில்க் ஸ்மிதா! இன்று சகுந்தலா தேவி! சுவாரஸ்யமான கதாபாத்திரங்களில் ஜொலிக்கும் வித்யா பாலன்

கணித மேதை சகுந்தலா தேவியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது.
அன்று சில்க் ஸ்மிதா! இன்று சகுந்தலா தேவி! சுவாரஸ்யமான கதாபாத்திரங்களில் ஜொலிக்கும் வித்யா பாலன்

கணித மேதை சகுந்தலா தேவியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது. அனு மேனன் இயக்கும் இப்படத்தில் வித்யா பாலன் சகுந்தலா தேவி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற செய்தி இன்று வெளியானது. 

இந்நிலையில் வித்யா பாலன் இன்று காலை தனது ட்விட்டர் பக்கத்தில் படத்தின் முதல் டீஸரை மறைந்த சகுந்தலா தேவிக்கு அர்ப்பணித்து வெளியிட்டார், சகுந்தலா தேவியின் அதீத கணித திறமையால் அவர் ‘மனிதக் கணினி’ (human computer) என்று அழைக்கப்பட்டார். டீஸருடன் வெளியான ஃபர்ஸ்ட் லுக்கில் சகுந்தலாவாகவே உருமாறி இருக்கிறார் வித்யா பாலன். படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது.

இதற்கு முன் வித்யா பாலன் பிரபல நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘டர்ட்டி பிக்சரில்’ நடித்திருந்தார். அது அவரது திரையுலக வாழ்க்கையில் முக்கியமான படமாக கருதப்பட்டது. தற்போது சகுந்தலா தேவியாக  நடிப்பது பற்றி தனது ட்விட்டரில் பகிர்ந்திருந்தார் வித்யா பாலன். அதில் 'சகுந்தலா தேவி என்ற மனிதக் கணினியை பெரிய திரையில் பிரதிபலிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

அவர் மிகவும் தனித்துவம் வாய்ந்தவர், வலுவான பெண்ணியக் குரல் கொடுத்தவர் மேலும் வெற்றியின் உச்சத்தை அடைய பலருக்கு உத்வேகம் அளித்தவர். என்னை உண்மையிலேயே கவர்ந்திழுப்பது என்னவென்றால் எப்போதும் ஜாலியாக இருக்கும் நான், இப்படியொரு அறிவான கதாபாத்திரத்தில் தோன்றும் முரண்தான். ஆனாலும் இதை நான் மிகவும் ரசிக்கிறேன். நிச்சயம் சகுந்தலா தேவிக்கு நியாயம் செய்வேன்’ என்றார்.

சகுந்தலா தேவியைப் போலவே தோற்றத்தில் வித்யா பாலன் இருக்கிறார் என்று அவருக்கு இப்போதே பாராட்டுக்கள் குவியத் தொடங்கிவிட்டன.

இந்தப் படம் அடுத்த வருடம் கோடை விடுமுறைச் சமயத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வித்யா பாலன், அண்மையில் வெளியான நேர்கொண்ட பார்வையில் அஜித்துடன் நடித்துள்ளார். இயக்குநர் அனு மேனன், லண்டன் பாரிஸ் நியூயார்க் என்கிற படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com