பிறந்தநாள் அறிவிப்பு! மோடி குறித்துச் சொல்லப்படாத கதையைச் சொல்ல வருகிறது ‘மன் பைராகி’

படத்திற்கான தலைப்பு ‘மன் பைராகி’ இதற்கு வைராக்யமான மனிதர் என்று பொருள் கொள்ளலாமா? அல்லது வைராக்யம் கொண்டவரது பயணம் என்று பொருள் கொள்வதா என்று புரியவில்லை. எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்
பிறந்தநாள் அறிவிப்பு! மோடி குறித்துச் சொல்லப்படாத கதையைச் சொல்ல வருகிறது ‘மன் பைராகி’

பிரதமர் மோடிக்கு இன்று 69 வது பிறந்தநாள். இன்று பிறந்தநாள் கொண்டாடும் மோடிக்கு அரசியல், சினிமா, வர்த்தகப் பிரமுகர்களும் பொதுமக்களும் தங்களது வாழ்த்துக்களைப் பகிர்ந்து வரும் நிலையில் நடிகர் பிரபாஸும் தனது முகநூல் பதிவில் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களைப் பதிவு செய்திருப்பதுடன் மோடி குறித்து அடுத்து வெளிவரவிருக்கும் மன் பைராகி திரைப்படத்திற்கான போஸ்டரையும் வெளியிட்டிருக்கிறார். முன்னதாக நடிகர் விவேக் ஓபராய் நடிப்பில் PM Narendra Modi  திரைப்படம் வெளிவந்திருக்கும் நிலையில் மீண்டும் மோடியின் கதையை முன் வைத்து ‘மன் பைராகி என்றொரு திரைப்படத்தை உருவாக்கி வருகிறார் பிரபல பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி. படத்திற்கான கதையை எழுதி இயக்கியிருப்பது பன்சாலியின் மகனும் இயக்குனருமான சஞ்சய் திரிபாதி. பத்மாவத், ஜோதா அக்பர், ராம் லீலா, தேவ் தாஸ் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி வசூல் ரீதியிலும் படங்களை வெற்றிபெற வைப்பதில் வல்லவரான சஞ்சய் லீலா பன்சாலி இத்திரைப்படத்தை தன் மகனுக்காக மகாவீர் ஜெயினுடன் இணைந்து தயாரிக்கிறார்.

இளமைக்கால மோடியின் கதையைச் சொல்ல வரும் திரைப்படம்..
இளமைக்கால மோடியின் கதையைச் சொல்ல வரும் திரைப்படம்..

‘மன் பைராகி’ திரைப்படமானது இதுவரை இந்த உலகம் அறிந்திராத வகையிலான இளமைக்கால மோடியின் கதையைச் சொல்லவிருக்கிறதாம். மோடி அரசியல் தலைவராகும் முன் என்ன செய்து கொண்டிருந்தார்? ஆர் எஸ் எஸ் சேவகராக இந்தியா முழுதும் சுற்றி வந்தார் என்று ஒற்றை வரியில் பதில் சொல்லி விடலாம் இந்தக் கேள்விக்கு. ஆனால், மோடியின் ஊர் சுற்றி புராணம் அத்தனை எளிதானதல்ல. அந்த புராணத்தில் அவருக்கு கிடைத்த அனுபவங்களே இன்று உலகம் முழுதும் அறியப்பட்டிருக்கும் ஒரு தலைவராக அவரை உருவாக்கியிருக்கிறது என்றால் அது மிகையில்லை.

படத்திற்கான தலைப்பு ‘மன் பைராகி’ இதற்கு வைராக்யமான மனிதர் என்று பொருள் கொள்ளலாமா? அல்லது வைராக்யம் கொண்டவரது பயணம் என்று பொருள் கொள்வதா என்று புரியவில்லை. எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், இதில் சொல்லப்படவிருக்கும் கதையானது நமக்குப் புதிது என்பது மட்டும் நிஜம். இத்திரைப்படத்தின் மூலம் மோடியின் வெற்றிக்கதையை அறிந்து கொள்ள வாய்க்கும் இளைஞர்கள் பலர் தங்களது வாழ்விற்கான முன்னுதாரணங்களை இதன் மூலம் வகுத்துக் கொள்ள முடியும் என்பதால் இந்தக் கதையை படமாக்கத் தோன்றியது என்றிருக்கிறார் தயாரிப்பாளர் சஞ்சய் லீலா பன்சாலி.

இளமைக்கால மோடியின் இதுவரை சொல்லப்படாத கதையை உலகுக்குச் சொல்ல உருவாகிக் கொண்டிருக்கிறது ‘மன் பைராகி’ திரைப்படம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com