Enable Javscript for better performance
Demi Moore claims Stunning Accusations About Ex Husband Ashton Kutcher- Dinamani

சுடச்சுட

  

  ‘இவனால் நான் தற்கொலை வரை சென்றேன்’ முன்னாள் கணவர் குறித்து அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட நடிகை டெமி மூர்!

  By சரோஜினி  |   Published on : 23rd September 2019 11:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  demi_moore

   

  டெமி மூர்...

  நடிகைங்க வாழ்க்கை வெளியில தாங்க பகட்டு, உள்ள பார்த்தா அடுக்கடுக்கா சோகம்!

  நடிகை டெமி மூர் 80 களில் மட்டுமல்ல இன்றும் கூட ரசிகர்களின் மனதைக் கொள்ளையடிக்கும் ரசிகை தான். இவர் இன்சைட் அவுட் (Inside Out) என்றொரு சுயசரிதைப் புத்தகம் எழுதியிருக்கிறார். டெமிக்கு மூன்று கணவர்கள் இருந்தனர். இப்போது அவர் மூவரையும் விவாகரத்து செய்து விட்டு தன் மூன்று மகள்களுடன் தனித்து வசித்து வருகிறார். 

  மூன்றாவது கணவரும் டெமியை விட 15 வயது இளையவருமான ஆஷ்டன் கட்சர் மீது டெமி மிக அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டு ஒன்றை சமீபத்தில் தனது புத்தக வெளியீட்டு விழாவின் போது முன் வைத்திருப்பது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. ஆஸ்டனை, டெமி திருமணம் செய்து கொண்டதற்கான முக்கிய காரணம், தன்னை தனது 20 களில் வாழ வைக்க ஆஷ்டன் போன்ற வயதில் இளையவரால் மட்டுமே முடியும் என்று நம்பி தான் ஆஷ்டன் மீது காதல் வயப்பட்டதாகவும் அதன் காரணமாகவே அவரை மணந்து கொண்டதாகவும் தெரிவிக்கும் டெமி, தங்களிடையேயான விவாகரத்துக்கு முக்கிய காரணமாக முன் வைப்பது, ஆஷ்டன்... தங்கள் அந்தரங்கமான திருமண வாழ்வின் அர்த்தம் கெடும்படியாக மல்டிபிள் செக்ஸுவல் பார்ட்னர்களை (பாலியல் கூட்டாளிகளாக மனைவி தவிர வேறு சில பெண்களையும் இணைத்துக் கொள்வது) உறவுக்குள் அறிமுகம் செய்து அவர்களைத் தானும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தியது தன்னை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாகக் குறிப்பிட்டிருக்கிறார் டெமி மூர். 

  அதுமட்டுமல்ல, ஆஷ்டன் தந்த மன உளைச்சலின் காரணமாகவே தனக்கு கருக்கலைப்பு நேர்ந்ததாகவும் அது மேலும் தன்னை மன அழுத்தத்தில் தள்ளவே அதிலிருந்து மீள அளவுக்கதிகமாக போதை மருந்துகளை உட்கொண்டதால் தற்கொலை நிலைக்குச் சென்று பின் ஆஷ்டனுடனான உறவு விவாகரத்தில் முடிந்தது என்றும் டெமி கூறியிருந்தார்.

  ஆஷ்டன் கட்சருக்கு பைலேட் பயிற்றுவிப்பாளரான (யோகாவில் ஒரு வகை) சாரா லீயலுடன் உண்டான உறவு அம்பலத்துக்கு வந்ததும் அதை ஆரம்பத்தில் டெமி ஏற்றுக்கொள்ளவே முயன்றிருக்கிறார். ஆயினும், செயற்கை கருத்தரித்தல் முறையில் மூன்றாவது கணவரின் குழந்தைக்குத் தாயாக டெமி கடுமையாக முயற்சி செய்தும் அது தோல்வியில் முடியவே, அதற்கு காரணம் இந்த முக்கோண உறவு தான் என்ற முடிவுக்கு வந்து பின் தான் மரணத்தை ஒத்த கொடும் துயரத்தில் வீழ்ந்ததாக தன் வாழ்வின் துக்கமான பக்கங்களை இன்சைட் அவுட் இதழில் பகிர்ந்துள்ளார் டெமி மூர்.

  56 வயதான அமெரிக்க நடிகை டெமி தனது 17 வது வயதில் அமெரிக்கப் பாடகரான ஃப்ரெட்டி மோரை மணந்தார். இவர்களது திருமணம் 5 ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது. 1985 ல் ஃப்ரெட்டி மூரிடன் இருந்து விவாகரத்துப் பெற்றார் டெமி.. ஆயினும் தனது பெயரின் பின் பகுதியில் இணைத்துக் கொண்ட கணவரின் பெயரை மட்டும் இன்னும் அவர் மாற்றவில்லை. 1987 ஆம் ஆண்டு மீண்டும் சக நடிகரான ப்ரூஸ் வில்லீஸை டெமி இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார். இன்று இவர்கள் விவாகரத்தான தம்பதிகளாக இருந்த போதும் இன்னும் நட்புடனே நீடிப்பதாகத் தகவல். ப்ரூஸ் வில்லீஸுடன் டெமிக்கு நடந்த திருமணத்தில் இத்தம்பதியினருக்கு மூன்று மகள்கள் இருக்கிறார்கள்.11 ஆண்டுகள் நீடித்த இந்த திருமண உறவும் 1998 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. பிறகு இரண்டு பேருடன் திருமண உறவின் எல்லை வரை சென்று மீண்ட டெமி மூர் 2003 ஆம் ஆண்டில் தன்னை விட 15 இளையவரான நடிகர் ஆஷ்டன் கட்சரைத் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமண உறவும் 2013 ஆம் ஆண்டில் முறிந்தது.

  2013 ஆம் ஆண்டின் பின் நீண்ட மெளனம் காத்த டெமி தற்போது தான் எழுதியுள்ள புத்தகத்தில் மேற்கண்ட விஷயங்களை எல்லாம் பகிர்ந்து கொண்டிருப்பது எதற்காக? தனது புத்தக விற்பனையை தூக்கி நிறுத்தவா? அல்லது உண்மையிலேயே மனம் உருகி இப்படிப்பட்ட தகவல்களை எல்லாம் வெளியிட்டிருக்கிறாரா? என்பது புரியாமல் தவிக்கும் ரசிகர்கள் டெமியின் புத்தகம் எப்போதடா வெளிவரும் என்று காத்திருக்கிறார்கள். சர்ச்சையைக் கிளப்பியிருக்கும் இன்சைட் அவுட் எனும் அப்புத்தகம் நாளை (செப்டம்பர் 24) அன்று வெளியாகவிருப்பதாகத் தகவல்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai