ஞானவேல் ராஜா கமல்ஹாசனுக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை என்பதே உண்மை: ராஜ்கமல் பிலிம்ஸ் விளக்கம் 

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கமல்ஹாசனுக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை என்பதே உண்மை  என்று ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
நடிகர் கமல்ஹாசன்
நடிகர் கமல்ஹாசன்

சென்னை: தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கமல்ஹாசனுக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை என்பதே உண்மை  என்று ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

2015-ம் ஆண்டு கமல், ஆண்டிரியா, பூஜா குமார் நடிப்பில் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் உருவான படம் - உத்தம வில்லன். இப்படத்தை இயக்குநர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. 

இந்நிலையில் கமல் மீது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, தயாரிப்பாளர் சங்கத்தில் வியாழனன்று புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில் அவர் கூறியிருப்பதாவது:

2015-ம் ஆண்டு உத்தம வில்லன் பட வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டத்தையடுத்து என்னை அணுகினார் கமல். எனது தயாரிப்பில் ஒரு படம் நடிப்பதாகக் கூறி முன்பணமாக ரூ. 10 கோடியைக் கேட்டுப் பெற்றார். ஆனால் நான்கு ஆண்டுகளாகியும் நடிக்க அவர் முன்வரவில்லை. மேலும் ரூ. 10 கோடியையும் திருப்பித் தரவில்லை. இந்தப் பிரச்னையில் தயாரிப்பாளர் சங்கம் தலையிட்டு எனக்குச் சேரவேண்டிய ரூ. 10 கோடியைப் பெற்றுத் தரவேண்டும் என்று புகாரில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தப் புகாரின் அடிப்படையில் கமல் ஹாசனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 

இவ்வாறு அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கமல்ஹாசனுக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை என்பதே உண்மை  என்று ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

இதுதொடர்பாக அந்நிறுவனம் வெள்ளியன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

10 கோடி ரூபாய் பணம் வாங்கியதாக கமல்ஹாசன் மீது பரப்பப்படும் குற்றச்சாட்டுகளை ராஜ்கமல் நிறுவனம் முற்றிலும் மறுக்கிறது.

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா நடிகர் கமல்ஹாசனுக்கு ரூ. 10 கோடி கொடுத்தார் என்பது அப்பட்டமான பொய்.

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கமல்ஹாசனுக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை என்பதே உணமை .

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கும் நடிகர் கமல்ஹாசனுக்கும் இடையே தனிப்பட்ட முறையில் எந்த ஒப்பந்தமும் இல்லை.

கமலுடைய புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலேயே ஞானவேல் ராஜா புகார் அளித்துள்ளார்.

இதனை சட்டரீதியாக எதிர்கொள்ள ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாராக உள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com