நடிகை கஜோலுக்கு கரோனா வைரஸ் தொற்றா?: அஜய் தேவ்கன் பதில்

பிரபல நடிகை கஜோலுக்கும் மகள் நைசாவுக்கும் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவல்களை நடிகர் அஜய் தேவ்கன் மறுத்துள்ளார்.
நடிகை கஜோலுக்கு கரோனா வைரஸ் தொற்றா?: அஜய் தேவ்கன் பதில்

பிரபல நடிகை கஜோலுக்கும் மகள் நைசாவுக்கும் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவல்களை நடிகர் அஜய் தேவ்கன் மறுத்துள்ளார்.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. கரோனா வைரஸால் உலகம் முழுக்க 40,000 மக்கள் இறந்துள்ளார்கள். கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்காக இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் தொடங்கிய ஊரடங்கு, ஏப்ரல் 14-ஆம் தேதி வரை அமலில் இருக்கும். கரோனா வைரஸ் சூழல் தொடா்பாக நாட்டு மக்களுக்கு ஒரே வாரத்தில் 2-ஆவது முறையாக உரையாற்றியபோது இந்த அறிவிப்பை வெளியிட்ட பிரதமா் மோடி, அந்த நோய்த் தொற்றுக்கு எதிரான உறுதியான போரில் இது மிக அவசியமான நடவடிக்கை என்று கூறியுள்ளாா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 1300 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரபல நடிகையும் நடிகர் அஜய் தேவ்கனின் மனைவியுமான கஜோலுக்கும் அவருடைய மகள் நைசாவுக்கும் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால் இதை மறுத்துள்ளார் அஜய் தேவ்கன். ட்விட்டரில் அவர் கூறியதாவது:

விசாரித்ததற்கு நன்றி. கஜோலும் நைசாவும் நலமாக உள்ளார்கள். அவர்களுடைய உடல்நலன் குறித்த வதந்திகள் அடிப்படை ஆதாரமில்லாதவை என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com